பக்கம்:பனித்துளி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 49

‘'வேண்டியது செய்து வைத்திருக்கிறேன். நேற்றுக் கூட அவள் அப்பா ஒரு ஜதை முத்து வளையல்களை வாங்கி வந்தார்’ என்று கூறிவிட்டு, அருகிலிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் சீதாலட்சுமி.

சிறிது நேரத்துக் கெல்லாம் அழகிய தந்தப் பெட்டி ஒன்றை எடுத்து வந்து மேஜை மீது வைத்தாள். பெட்டியைத் திறந்ததும் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புது மாதிரியான பல அணிகள் இருந்தன. இவ்வளவு நகை களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டுக் கழுத்தில் நெருக்கமாகக் கோத்திருந்த முத்து மாலை ஒன்றையும், கைகளில் சிவப்புக் கற்கள் பதித்த வளை ஒன்றும், இடது கையில் ‘ரிஸ்ட் வாட்சு”ம், காதுகளில் மாங்காய் வடிவத்தில் செய்த பச்சைக்கல் தோடும் அணிந்து நிற்கும் பெண்ணின் மனத்தைப் பற்றிக் கர்னாடக மனுவியான மீனாட்சி அம்மாளுக்குப் புரியவில்லை! சுமைதாங்கியைப் போல் வடம் வடமாக ஐந்து சரம் தங்கச்சங்கிலியும், கைகளில் ஆறு ஏழு வளையல்களும், காதுகளில் நட்சத்திரம் போல் சுடர் விடும் வைரக் கம்மல்களும், அகலமாகச் சரிகை போட்ட புடவையும் தன்னை ஒரு பத்தாம் பசலி என்பதைச் சொல்லாமலேயே விளங்க வைத்து விடும் என்று மீனாட்சியும் ருக்மிணியும் நினைத்து வெட்கப்பட்டனர்.

- ‘குழந்தை ஊரில் இல்லை. கிராமத்துக்குப் போய்

இருக்கிறான். அவனுடைய சம்மதம் தெரிந்தால் முகூர்த்தம் வைத்துக் கொண்டு விடலாம். பெண்ணின் இஷ்டத்தையும் தெரிந்து தான் அவனுக்கு எழுத வேண்டும்’ என்றாள் மீனாட்சி. f :

  • மிஸ்டர் சங்கரனை எனக்குத் தெரியுமே! எவ்வளவோ முறைகள் காலேஜில் நடக்கும் விழாக்களில் நாங்கள் சந்தித்திருக்கிறோம்’ என்றாள் நீலா பளிச்சென்று.

“மிஸ்டர் சங்கரன், மிஸ்டர் சங்கரன்’ என்று மீனாட்சி அம்மாள் தனக்குள் இரண்டு தடவைகள் சொல்லிக் கொண்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/51&oldid=682357" இலிருந்து மீள்விக்கப்பட்டது