பக்கம்:பனித்துளி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி - 51

வேலைகளில் தான் காட்டும் கைத்திறமையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து விட்டானா? எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் தந்தையின் ஏழ்மை நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டா தன்னை அவன் மணக்க விரும்பு கிறான்? கையில் பிடித்திருந்த மண் வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் காமு.

அவனிடமிருந்து இரக்கமும், பச்சாத்தாபமும் பெற காமு விரும்பவில்லை. பெண்மை வேண்டும் இதயபூர்வமான அன்பையும், காதலையுமே அவள் பெற விரும்பினாள். ‘பாவம், ஏழை!’ என்று சங்கரன் தன்னை ஒன்றும் மணக்க வேண்டாம்! அந்த மாதிரியான இரக்கம் அவளுக்குத் தேவையில்லை. o

சங்கரன் வந்து போய் மூன்று தினங்கள் ஆகிவிட்டன். அவன் வரவை திர்பார்த்து ஏங்கும் மனம் காரணமற்ற ஒரு ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தது.

4. சங்கரனின் சங்கடம்

அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணிர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உ ட் க ர் ந் து ஆ ட த் தொடங்கினாள். ‘இன்பம் வருகுதென்று சொல் சொல் கிளியே!’ என்று பாடிக் கொண்டே ஆடினாள். வெறுமனே சாத்தி யிருந்த கதவைத் திறந்துகொண்டு சங்கரன் உள்ளே வந்தான். அவன் கையில் சிறிய பெட்டி ஒன்றும், படுக்கை

ஒன்றும் இருந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/53&oldid=682359" இலிருந்து மீள்விக்கப்பட்டது