பக்கம்:பனித்துளி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிந்துளி 53

இன்பதற்குக் கூலியா கேட்பார்கள்? வருடந்தோறும் மார்கழி திங்களில் விடியற்காலம், தான் வணங்கும் ரீ ருெஷ்ண பரமாத்மாவின் அருளினால் அல்லவா வலியவே வந்து தன்னை மணக்க வேண்டுகிறார்?. கண்ணனின் கருனைதான் என்ன? கருணைக்கடல் என்று பெரியவர்கள் தெரியாமலா குறிப்பிட்டார்கள் அவனை?

என்று உள்ளம் குழைய அழைத்தான்

5 *

‘காமு...! சங்கரன்.

காமு தலை நிமிர்ந்து, நீர் நிறைந்த கண்களால் அவனைப் பார்த்தாள்.

‘அசடே! ஏன் அழுகிறாய்? லட்சுமி தேவியைப் போல் இருக்கும் உன்னை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி அல்லவா? சம்மதம் தானே காமு?’ என்று இரண்டாம் முறையாகக் கேட்டான் சங்கரன். =

காமுவின் கொவ்வை அதரங்கள் உணர்ச்சியால் துடித்தன. அதில் நெளிந்தோடும் புன்னகையால் அவள் சம்மதத்தை அறிந்து கொண்டான் சங்கரன்.

அதே சமயம் ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டை யிலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார். ரேழியைத் தாண்டி தகப்பனார் உள்ளே வருவதற்குள் காமு சமையலறையில் பதுங்கிக் கொண்டாள்.

‘வா, அப்பா சங்கரா! என்ன, படுக்கை பெட்டி எல்லாம் தடபுடலாக இருக்கிறது?’ என்று கேட்டு விட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்தார் அவர்.

“நாளைக்கு ஊருக்குப் புறப்படுகிறேன் மாமா. இங்கு வந்து இரண்டு நாட்கள் கூடத் தங்காமல் போய் விட்டால் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களே என்று பெட்டி, படுக்கையுடன் வந்து விட்டேன்’ என்றான் சங்கரன் புன்சிரிப்புடன்.

அவனுடைய சரளமான சுபாவம் ராமபத்திரய்யருக்கு மேலும் அவனிடம் உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்தது.

ப.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/55&oldid=682361" இலிருந்து மீள்விக்கப்பட்டது