பக்கம்:பனித்துளி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி - 59

“ஆமாம், அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு பொவாள் அவள். o

அன்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் விருப்பத்தை அறிந்து கொண்டு போக வந்திருந்தார். சங்கரன் ஊரி லிருந்த வந்தது முதற்கொண்டு அவன் மனம் குழம்பிக் கிடந்தது. காமுவின் அழகிய வதனம் அடிக்கடி தோன்றி அவனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது குழம்பிய மனத்துடன் சங்கரன் தோட்டத்தில் உலாவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

தகப்பனாரிடம் தான் ஊரிலிருந்து வந்ததும் காமுவைப் பற்றிப் பிரஸ்தாபித்தது அவன் நினைவுக்கு வந்தது.

என க்கு நீ யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண் டாலும் ஒன்றுதான் அப்பா. பணம் பணம் என்று பறக்கிறவள் உன் அம்மாதான். அவளுடைய அபிப்பிராயத் தில் பணம் ஒன்றுக்குத்தான் மதிப்பு இருக்கிறதே ஒழிய வேறு விஷயங்களுக்கு மதிப்பே இல்லை! பதினைந்தாயிரம் சீருடன் வந்த உன் மதனி சம்பகம் இந்த வீட்டில் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய் சங்கரா? நீயும் ஒரு ஏழைப் பெண்ணைக் கொண்டு வந்து இந்த வீட்டில் அவஸ்தைப்பட விட்டு வைக்கப் போகிறாயா?” என்று கேட்டார் சர்மா.

சங்கரன் காமுவைப் பற்றிக் கூறியபோது, “ஆமாம். ஒன்றும் இல்லாமல் போனால் இரண்டாந்தாரமாக யாருக்காவது கொடுக்கிறதுதானே?” என்று வெகு அலட்சிய மாகச் சொன்னாள் மீனாட்சி அம்மாள். தகப்பனார் சர்மாவோ எதிலும் பட்டுக் கொள்ளாதவர். தாய் ஒரு அகங்காரம் பிடித்தவள். சங்கரன் காமுவைப் பற்றி அந்த வீட்டில் யாருடன் பேசுவது? யோசனையில் மூழ்கி இருந்த சங்கரனைச் சம்பகம் வந்து கூப்பிட்டாள். == அம்மா உங்களைத் தேடுகிறாரே?’ என்றாள் *IDLJhLD,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/61&oldid=682368" இலிருந்து மீள்விக்கப்பட்டது