பக்கம்:பனித்துளி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 61

கொல்லைப் பக்கம் வந்தாள். ஆனால், சங்கரன் அங்கு இல்லாமல் குழந்தை பானுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந் தான். நெருப்புப் பறக்கும் ஜூர வேகத்தில் குழந்தை மூச்சு விடுவதற்கே திணறினாள். பக்கத்தில் சம்பகம் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள்.

‘ஏண்டா, ஒரு நாழியாக உன்னைத் தேடுகிறேன். அவர் உன்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக் கிறார். நீ பாட்டுக்கு இங்கே உட்கார்ந்திருக்கிறாயே? இதுக்கு என்ன முழுகி விட்டதாம் இப்போ?” என்று அதிசயத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டாள் மீனாட்சி

-L6 .

சங்கரனுக்குத் தாயின் குணம் தெரியும். தமையனால் நிராதரவாக விடப்பட்ட குழந்தை பானுவும், சம்பகமும் அந்த வீட்டில் படும் அவஸ்தையும் தெரியும்.

‘வருகிறேன் அம்மா. பானுவுக்கு ஜூரம் அதிகமா இருக்கிறதே? சாயங்காலம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போய் இருப்பேனே?”

பிரசன்னமாக இருந்த மீனாட்சி அம்மாளின் முகம் கடு கடுவென்று மாறியது. கோபத்தால் முகம் சி வக்க சம்பகத்தை உருட்டி விழித்துப் பார்த்தாள்.

“அதுக்குத் தான் குளிர் காலமானால் காய்ச்சலும், இருமலும் வருகிறதே? இவள் செல்லம் கொடுத்துக் கொடுத்து குட்டிச் சுவராக்குகிறாள் அதை. கண்டும் காணாமலும் வெறுமனே எதையாவது தின்று கொண்டே இருந்தால் உடம்புக்கு வராதா?”

சம்பகமோ, சங்கரனோடு பதில் கூறுவதற்கு முன்பு ருக்மிணி அங்கு வந்து சேர்ந்தாள்.

  • நன்றாக இருக்கிறதே மரியாதை!அவர் எத்தனை நாழி உனக்காகக் காத்திருப்பார்? போய் ஒரு நிமிஷம் பேசி விட்டுத்தான் வாயேண்டா!’ என்று உரிமையுடன் தம்பியை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/63&oldid=682370" இலிருந்து மீள்விக்கப்பட்டது