பக்கம்:பனித்துளி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பனித்துளி

அதட்டி, சங்கரனை அங்கிருந்து ஹாலுக்கு அனுப்பி வைத்தாள். #.

தொலைவில் பொன்மணி கிராமத்தில் சிறிய வீட்டில் பொறுமையே. உருவான காடுவின் அழகியமுகம் மறுபடியும் சங்கரனின் மனக் கண் முன்பு தோன்றி மறைந்தது. அங்கு அவன் அவளுடன் பேசிய பேச்சுக்கள்,:ராமபத்திரஅய்யரிடம் நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்த வார்த்தைகள் யாவும் கடலில் கரைத்த சர்க்கரை போல் மறைந்துவிட்டன. திரண்ட செல்வமும், அழகிய பெண்ணும், போக வாழ்க்கை யுமே அவன் முன்பு பிரும்மாண்ட உருவில் தோன்றின.

‘ஹல்லோ!’ என்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினார். பதிலுக்குப் புன்சிரிப்புடன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு மரியாதையாக நின்றான் சங்கரன்.

‘அப்படியானால் முகூர்த்தம் வைத்து விடுகிறேன், மிஸ்டர் சர்மா! என்ன சங்கரா?” என்று கம்பீரமாகக் கேட்டார் அவர். -

சங்கரனும், அங்கு இ ரு ந் த பெரியோர்களும் தலை அசைத்து ஆமோதித்தனர். i.

உள்ளே.குழந்தை பானு மூச்சு விட் முடியாமல் திணறு வதைக் கண்டு சம்பகம் கைகால் பதற ஹாலுக்கு வந்தாள்.

தங் யின் கடுகடுப்பையும், தமக்கையின் நிஷடுரத்தை யும் பொருட்படுத்தாமல் சங்கரன் ஒடிப் போய் டாக்டரை அழைத்து வந்தான். பானுவுக்கு டிப்தீரியா வியாதி என்றும், உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் கூறிவிட்டு, இஞ்செக்ஷன் கொடுத்துச் சென்றார்.

“நாளை சாயங்காலம் சம்பந்தி வீட்டார் கல்யாணம் சொல்ல வரப் போகிறார்கள், இங்கே இவ்வளவு அமர்க்களப் படுகிறதே?’ என்று அலுத்துக் கொண்டாள் ருக்மிணி.

‘என்றைக்குத்தான் நேரே இருந்தது எல்லாம். வயிற்றிலே இருக்கும் போதே அப்பனைக் கண் காணாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/64&oldid=682371" இலிருந்து மீள்விக்கப்பட்டது