பக்கம்:பனித்துளி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பனித்துளி

ஏற்படும் என்கிற நம்பிக்கைதான் காரணம். பிறந்த இடத்தைவிடப் புகுந்த இடத்தை உயர்வாகக் கருதும் பாரத நாட்டுப் பெண்களின் பெருமைதான் அவளை அவ்விதம் எண்ணிஅளவு கடந்த துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் படி செய்தது.

ஆனால், எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? நாட்டுப் பெண்ணின் துரதிர்ஷ்டத்தால் பிள்ளையை உயிருடன் இழக்கும்படி நேரிட்டிருந்தாலும், ஒன்றும் தெரியாத குழந்தை இவர்களை என்ன செய்தது? பிள்ளை யின் குழந்தை, உடன் பிறந்தானின் குழந்தை என்கிற பாசம் கூட இல்லாமல் போய் விட்டதல்லவா?

விட்டில் ஒரே அமர்க்களம்! விருந்துச் சாப்பாடும்’ கல்யாணப் பேச்சும், சீர் சிறப்புக்களின் பெருமையும் காதைத் துளைத்தன. சம்பகம் என்று ஒரு மனுஷி இருப்பதாகவோ அவள் குழந்தை சாகக் கிடப்பதாகவோ ஒருவரும் நினைக்க வில்லை. சம்பகத்தின் மனம் குமுறியது. இப்படி உதாசீனம் செய்பவர்கள் மத்தியில் இருப்பதைக் காட்டிலும் தன் கூடப் பிறந்தவன் தன்னை எப்படி நடத்தினாலும் அவனுடன் போய் இருந்து விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.

கூடத்தில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு, அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். “சம்பகமும், சமையல்கார மாமியும் வீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்!” என்றாள் மீனாட்சி அமமாள.

“கல்யாணத்துக்கு மதனி வர வேண்டாமா அம்மா?” என்று சங்கரன் கேட்டான்.

‘குழந்தையை மாத்திரம் அழைத்துப் போனால் போனும்!” என்றாள் ருக்மிணி.

குழந்தை இருக்கிற இருப்பிலே கல்யாணத்துக்கு அழைத்துப் போகிறார்களாம்!” என்று மனத்துக்குள் வேதனைப்பட்டாள், அவர்கள் பேச்சை அரையும் குறையு மாகக் கேட்ட சம்பகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/66&oldid=682373" இலிருந்து மீள்விக்கப்பட்டது