பக்கம்:பனித்துளி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 67

நல்யாணக் கடிதங்களை அவரிடம் கொடுத்து விட்டுப் போனான். -i.

ஒன்று முத்தையாவின் மூன்றாந்தாரக் கல்யாணக் கடிதம். மற்றொன்று சங்கரனின் கல்யாணக் கடிதம்!

“டாக்டர் மகாதேவன் அவர்களின் குமாரத்தி செள. நீலாவை கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்து விட்டார் ராமபத்திர அய்யர். *

பணம் பணத்துடன் சேர்ந்து விட்டது. அவருடைய ஆசையை நினைத்து அவருக்குச் சிரிப்பு வந்தது. யாராவது சாதாரணவரனாக ஒன்று பார்த்துச் சொல்லும்படித்தானே அவர் சங்கரனைக் கேட்டார்? ஆசையையும், நம்பிக்கையை யும் ஏற்படுத்தியவன் அவன்தான்.

கொல்லையிலிருந்து திரும்பிய காமு தகப்பனாரின் வேதனை படர்ந்த முகத்தைக் கவனித்தாள். ஊஞ்சல் பலகையில் இரண்டு மஞ்சள் கடுதாசிகள் கிடந்தன.

‘குழந்தை! ஆசையும், பாசமும்தான் மனுஷனுக்கு

விரோதிகள். எதிலும் பற்றில்லாமல் இருப்பவன்தான்

ஞானி’ என்று ராமபத்திரய்யர் வேதாந்தம் பேச ஆரம்பித்தார்.

காமு கட, தங்களை எடுத்துப்பார்த்தாள் மூன்றாந்தார மாக எந்த இளம் பெண்ணின் வாழ்க்கையையோ பாழாக்க முயலும் சுயநலக்காரனின் கல்யாணக் கடிதத்தைப் படித்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. வாய் வேதாந்தம் பேசிவிட்டுப் பெரிய லட்சியவாதி போல் நடித்த சங்கரனின் சுயநலத்தைக் கண்டும்.அந்த ஏழை சிரிக்கத்தான் செய்தாள்.

ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் மனம் அளவு கடந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஹிருதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது டோன்ற வேதனையை அனுபவித்தாள் காமு. நீலா, நீலா’ என்று பலமுறை தனக்குள் பேசிக்

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/69&oldid=682376" இலிருந்து மீள்விக்கப்பட்டது