பக்கம்:பனித்துளி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பனித்துளி

கொண்டாள். தனக்கு எதிரியாகத் தன்மீது வஞ்சம் தீர்க்கவே நீலா என்று ஒரு பெண்ணை பிரும்மதேவன் சிருஷ்டி செய்து அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இல்லாவிடில் அவ்வளவு உறு தி யாக த் தன்னை மணப்பதாகக் கூறிச் சென்ற சங்கரனின் மனம் இவ்வளவு சடுதியில் மாறி விடுமா? வெறும் மேடைப் பிரசங்கம் செய்யும் லட்சியவாதியா அவன்? ஆமாம், வாய் கிழியப் பேசி விட்டு, எவ்வளவு பேர் ரகசியமாக வரதட்சணை வாங்கவில்லை? பேசுவது என்னவோ வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து!

காமுவின் கண்களிலிருந்து பல பலவென்று கண்ணிர் உதிர்ந்தது. அவள் ஏன் அழுகிறாள்? எதற்காக அழுகிறாள்? இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றும் அறியாதிருந்தவளின் மனத்தில், ஆசை வித்தை ஊன்றி அது முளைத்துத் தழைப்பதற்கு முன்பு அதைக் கிள்ளியும் எறிந்தாயிற்று.

காமுவும் ஆழ்ந்த யோசனையில் ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டாள்.

இது வரையில் வெளியில் யார் வீட்டுக்கோ போய் இருந்த விசாலாட்சியும் வந்து சேர்ந்தாள். அவள் முகம்

எப்போதும் போலவே கடுகடுவென்று இருந்தது.

‘முத்தையா வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறானாம். கல்யாணமும் ஏற்பாடாகி விட்டதாம். அந்தப் பிள்ளை சொன்னதை நம்பிக் கொண்டு நீங்கள் பாட்டுக்குப் பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கணவனிடம் கேட்டாள் விசாலாட்சி,

“இனிமேல் எனக்கு யார் வார்த்தையிலும் நம்பிக்கை இல்லை’ என்று சூள் .ெ கா ட் டி வி ட் டு எழுந்தார் ராமபத்திரய்யர். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் இன்னும் பத்து வயது அதிகமானவர் போன்று தோற்றம் அளித்தார். சாந்தம் ததும்பும் அவர் கண்களிலும் கண்ணிர்

ததும்பிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/70&oldid=682378" இலிருந்து மீள்விக்கப்பட்டது