பக்கம்:பனித்துளி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி == 73

சரியாக ஐந்து மணிக்குத் தன் வீட்டுக் காரை சங்கரனுக்காக அனுப்பி வைப்பாள். அதில் இருவரும் உட்கார்ந்து வெளியே உலாவப் போய் விட்டு வருவார்கள். அவள் மட்டும் மாமியார் வீட்டிற்கு என்று வந்து சாதாரணமாக ஒருவருட றும் பேசுவதில்லை. சங்கரன் தினம் அவள் வீட்டிற்குப் போய் வரவேண்டும்! -

‘மகாராணி மாதிரி அவள் அங்கே இருந்து உத்தரவு போடுவது, இவன் அதைக் கேட்டுகொண்டு ஆடுவது!” என்று ஏதாவது மீனாட்சி முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். “வீட்டில் நாலு பேர் கல்யாணம் விசாரிக்க வருகிறார் கள். பத்து நாளைக்கு நீலாவை இங்கே விட்டு வையுங்கள்’ என்று மீனாட்சி அம்மாள் சம்பந்தி அம்மாளிடம் கேட்டுக் கொண்டாள். -

‘அவள் யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். நீங்களே கேட்டுப் பாருங்கள்’’ என்று கூறிவிட்டாள் அந்த அம்மாள்.

“கல்யாணம் விசாரிக்க வருகிறவர்கள் எதிரில் நான் என்ன கொலு பொம்மை மாதிரி நிற்க வேண்டுமா?’ என்று ஒருவித அலட்சியத்துடன் கூறிவிட்டுத் தாயுடன் காரில் போய் ஏறிக் கொண்டாள் நீலா.

மீனாட்சி அம்மாள் தன் பெரிய உடம்பைக் குறுக்கிக் கொண்டு, சுண்டைக்காய்போல் முகம் வற்ற உள்ளே போய் விட்டாள். பார்த் தாயா அவள் பேசுகிறதை?’ என்று அழ முடியாத குறையாக ருக்மிணியிடம் சொல்லிக்கொண்டாள்.

‘பார்க்கிறது என்ன? பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் அப்படித்தான் இருக்கும்!” என்று சர்மா ஒரு போடு போட்டார் மனைவியைப் பார்த்து.

‘இருக்கும், இருக்கும்! என்னை யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறதே. மட்டு மரியாதை இல்லாமல்! ஆகட்டும்! சாயங்காலம் சங்கரன் அவாள் வீட்டுக்குப் போகிறதைப் பார்க்கிறேன். இவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/75&oldid=682383" இலிருந்து மீள்விக்கப்பட்டது