பக்கம்:பனித்துளி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பனித்துளி

“எத்தனை நாளைக்குத்தான் ஒருத்தரிடம் ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டிருப்பாய்? பேசாமல் நர்ஸ்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விடு. நீ மாத்திரம் ஒண்டிக் கட்டை இல்லை, பார்! குழந்தை வேறு இருக்கிறது’ என்று தமையன் ஆலோசனை கூறினான்.

கணவன் வீட்டில் செல்வம் இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு வெளியார் நான்கு பேர்கள் வேறு சாப்பிடுகிறார்கள். சம்பகமும், அவள் பெண்ணும் தண்டச்சோறு தின்பதாகவே மீனாட்சி அம்மாள் கூறி வந்தாள்! இங்கே தமையன் வீட்டிலும் செல்வம் கொழிக்கிறது. மாதம் நாலு பங்களுர் கிரேப் புடவைகள் மதனி வாங்குகிறாள். வானத்து நட்சத்திரங்களும், மரத்தில் காய்க்கும் காய்களும், இலைகளும், பூவும் அவள் கழுத்தில் தங்க ஆபரணங்களாகத் துவண்டு கொண் டிருந்தன. ஆனால், கணவனால் நிராதரவாக விடப்பட்ட நாத்தனார் தன் வீட்டில் தண்டச்சோறு தின்பதாகவே மதனி நினைத்தாள். =

தமையனும் வீட்டில் தங்கை என்ற ஒரு த்தி இருப்ப தாகவே நினைக்கவில்லை. அவளாகவே பேச வந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

சம்பகம் தன் துர்ப்பாக்கியத்தை நினைத்து மனம் கலங்கினாள். தனிமையில் கண்ணிர் வடித்தாள். ராமனைப் பிரிந்த சீதா தேவியைப் போல் சோகமே உருவாக இருந்தாள். குழந்தை பானுவுக்காகவே தான் ஜீவித்திருக்க வேண்டும் என்று அவள் அடிக்கடி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள். * o m சம்பகம் பிறந்த வீடு வந்து நான்கு மாதங்கள் ஆயின. அங்கிருந்து யாரும் அவளை மறுபடியும் வரும்படியோ, அவள் கேடிமத்தை விசாரித்தோ ஒரு வரி கூட எழுதவில்லை. மாமனார் மனம் நோகக் கூடாதென்று அவள் எவ்வளவு பணிவிடை செய்திருப்பாள்? மாமியாரின் கடும் சொற்களை எவ்வளவு தாங்கியிருப்பாள்? நாத்தனாரின் முகம் கோணாமல் அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/80&oldid=682389" இலிருந்து மீள்விக்கப்பட்டது