பக்கம்:பனித்துளி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 79

எவ்வளவு செய்திருப்பாள்? எல்லாவற்றிற்கும் மேலாக சங்கரனிடம் வைத்திருந்த பிரியமும் அன்பும் கூட அல்லவா மறைந்து போய்விட்டன! மைத்துனன் என்று எண்ணாமல் ‘உடன் பிறந்த சகோதரனைப் போல அல்லவா அவனிடம் அன்பு பூண்டிருந்தாள்! இன்று அவளைப் பற்றி யாரும் அந்த வீட்டில் நினைப்பவர் இல்லை. அக்கினி சாட்சியாக மணந்து வாழ்வின் சுகதுக்கங்களில் உன்னைக் கைவிடேன்’ என்று சத்தியம் செய்தவனே அவளை மறந்தபோது, மற்ற உறவினர் மறந்து போனது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமில்லை அல்லவா?

சம்பகம் தமையன் கூறிய ஆலோசனைப்படி நடக்கச் சித்தமாகத்தான் இருந்தாள். இருந்தாலும், ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள் தனக்கு விடிவு காலம் கிட்டுமென்று நம்பியிருந்ததால், மறுபடியும் கணவன் வீட்டிற்கே போய் அங்கு இருப்பவர்களிடையே வசிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது அவளுக்கு. தன் கருத்தைத் தமையனிடமும், மதனியிடமும் வெளியிட்டபோது, அவர்கள் வெறும் ‘உபசாரத்துக்காக முதலில் அவளை அனுப்ப மறுத்தார்கள்.

‘அங்கே.போய் என்ன செய்யப் போகிறாய் சம்பகம்?’’ என்று தமையன் நிஷ்டுரமாகவே கேட்டான். +

‘இல்லை அண்ணா! நான் இருக்க வேண்டிய இடம் அதுதானே? உன்னையும், குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலின்ால் வந்தேன். பார்த்தாகி விட்டது. கொழுந்தன் கல்யாணத்துக்குக்கட்ட இராமல் வந்து விட்டேன. அந்தக் கோபம்தான் போல் இருக்கிறது, அவர்கள் கடிதம்கூடப் போடவில்லை’ என்று கணவன் வீட்டாரை விட்டுக் கொடாமல் பேசினாள் சம்பகம்.

“ஆமாம், ஆமாம். இல்லாவிட்டால் ரொம்ப கவனித்து விடுபவர்கள்தான்!” என்று கோபமாகப் பேசினான் தமையன். ஆனால், தடுத்துச் சொல்லாமல் அன்று ரயிலிலேயே அவளையும் பானுவையும் அனுப்பி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/81&oldid=682390" இலிருந்து மீள்விக்கப்பட்டது