பக்கம்:பனித்துளி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 83

அதற்குள் காமுவின் யோசனையை ஏற்பதென முடிவு செய்த ராமபத்திர அய்யர், நீதான் பார்த்துக்கொள் அப்பா பசுமாட்டை!” என்று கறவைப் பசுவைச் சுப்பரமணி யிடம் விட்டுவைத்தார். வாயில்லாத பிராணியான அதுகூட கண்களில் கண்ணிர் வழியத் தன் எஜமானரைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தது. மணம் வீசும் மல்லிகைக் கொடியும், ருசி மிகுந்த வாழை, கொய்யா மரங்களும், குளிர்ச்சியான கிணற்றங்கரையும், தொலைவில் சமுத்திரம் போல் தளும்பி வழியும் ஏரியும், பொன்மணி கிராமத்தின் ஜனங்களும் சேர்ந்து காமுவையும், அவள் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தார்கள். “ஆயிரம் உருண்டைகள் இருந்தாலும் விசாலம் மாமி வந்தால் நொடியில் தீர்ந்துவிடும்’ என்று அப்பளக் கச்சேரிப் பெண்கள் கண்களில் கண்"ைர் வழியக் கூறினார்கள்.

ஒட்டு வீடானாலும் சகலவிதமான சுதந்திரத்துடனும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தெற்குப் பக்கமாக இருந்த திண்ணையில் கடுங்கோடை காலத்தில் கூட சில்”லென்று காற்று வீசும். ராமபத்திர அய்யர் அடிக்கடி ‘வடக்குப் பார்த்த அரண்மனையைவிடத் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை உயர்வு” என்று சொல்லி மகிழ்வார். நாள் தவறாமல் குடலை நிறையப் பூத்துக் குலுங்கும் நித்திய மல்லிகைக் கொடி தெரு பூராவும் பந்தல் போட்டது போல் படர்ந்து மணம் வீசிக் கொண் டிருக்கும். வீட்டிற்குத் தேவையான கீரை, காய்கறிகள் காய்க்கும் கொல்லைப்புறம், கரும்பைப் போல் இனிக்கும் கிணற்று நீர், அதைச் சுற்றிலும் அடர்த்தியாக வாழை மரங்கள், மத்தியான வேளைகளில் “கீச் கீச்” சென்று சதங்கை ஒலி எழுப்பும் சிட்டுக் குருவிகளும், அணிற்பிள்ளை களுமாக அந்தக் கிணற்றங்கரை இன்ப வனமாக இருந்து வந்தது.

க_இனிமேல் பட்டண வாசத்தில் ஒரு அறைக்கு மாதம் பதினைந்து ரூபாய் வாடிகை கொடுக்க வேண்டும். வீட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/85&oldid=682394" இலிருந்து மீள்விக்கப்பட்டது