பக்கம்:பனித்துளி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக்காரருக்குப் பயந்து நடக்க வேண்டும். வாடலும், சொத்தையும், உலர்ந்ததும் தான் சாப்பிட வேண்டும். பச்சைப் பசேல் என்று காய்கறிகள் எங்கே கிடைக்கிறது?’விசாலாட்சி யோசனையில் ஆழ்ந்தவளாகக் கன்னத்தில் கை ஊன்றி வண்டியில் உட்கார்ந்திருந்தாள். ராமபத்திர அய்யரின் மனம் பலவிதமான யோசனைகளில் ஆழ்ந்து கிடந்தது. காமு ஒருத்திதான் உற்சாகமாக இருந்தாள். பணம் இல்லாத குறைவால் தன் வாழ்வு தாழ்வடையக் கூடாது. எப்படியாகிலும் முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால்தானே அவள் பட்டினம் போகிறாள்?

“வீடு விற்ற பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று கேட்டாள் விசாலாட்சி, கணவனைப் பார்த்து.

‘என்னத்தைச் செய்கிறது? எனக்கு என்ன தெரியும்? நடேசனைப் போய்ப் பார்க்கிறேன்” என்றார் ராமபத்திர அய்யர். =

‘த்சூ” என்று சூள் கொட்டினாள் விசாலாட்சி. “பணக்காரர் உறவே நமக்கு வேண்டாம் அப்பா!’ என்றாள் காமு கண்டிப்பாக.

“முன் பின் தெரியாத ஊருக்குப் போகிறோம். யார் உதவியால் முன்னுக்கு வருவது?’ என்று கேட்டார் தகப்பனார். *

“அவரைப் போல் ஆயிரம் பேர்கள் இருக்கும் பட்டினத்தில் அவர்கள் வீட்டைத் தேடிக் கொண்டுதான் போக வேண்டுமாக்கும்! சத்திரம் சாவடி ஒன்றும் கிடையாதா என்ன, அங்கே?’ என்று கோபத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து. பெண்ணின் மனம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறது என்பதை ராமபத்திர அய்யர் உணர்ந்து கொண்டார் அதன் பிறகு காமுவாவது அவள் பெற்றோராவது ஒன்றும் பேசவில்லை.

‘ரயில் வண்டியில் காமுவுக்குப் பேச்சுத் துணைக்காகப்

படித்த ப்ெirஒருத்தி அகப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/86&oldid=682395" இலிருந்து மீள்விக்கப்பட்டது