பக்கம்:பனித்துளி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பனித்துளி

பட்டினம் வந்ததும் அவள் காமுவிடம் தன் விலாச த் தைக்கூறி, ஏதாவது உதவி தேவையானால் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனாள்.

மத்தியானம் சாப்பிடுவதற்காக நீலா மாடி அறையி லிருந்து கீழே இறங்கி வந்தாள். முழங்கை வரை நீண்டிருக்கும். லினன் சோலி மீது வெண்மையான மஸ்லின் புடவை காற்றில் பறந்து கொண்டிருந்தது. உதடுகளில் வெற்றிலைக்குப் பதிலாகச் சிவப்பு சாயத்தைத் தீட்டி இருந்தாள். இரட்டைப் பின்னல்களை எடுத்து முன்புறம் போட்டிருந்தாள் அவள். சமையற்கட்டின் போஜன கூடத்தில் அவள் வருவதற்கு முன்பே வெள்ளித் தட்டை வைத்து மனை போட்டிருந்தாள் சமையற்கார மாமி. துரங்கி வழிந்த கண்களோடு நீலா மணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். குடும்பப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அன்போ, அடக்கமோ எதுவுமில்லாமல், யாரையும் லட்சியம் பண்ணாமல் அவள் இருப்பதைப் பார்த்ததும் சம்பகத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘கணவன் எழுந்திருப்பதற்கு முன்பு தான் எழுந்து, கணவன் உறங்கிய பின்பு உறங்கும் பாரத நாட்டுப் பெண்களின் பண்பாடு எங்கே? பகல் பதினோரு மணிவரை அரைத் துாக்கத்தில் கழிக்கும் இந்த நீலா எங்கே?

“ஏனம்மா? உன் ஒரகத்தி ஊரிலிருந்து வந்திருக் கிறாளே, பார்த்தாயா?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிடும் கூடத்தை அடைந்தார் சர்மா. சமையலறை வாசற்படியில் உட்கார்ந்திருந்த சம்பகம் மரியாதையாக எழுந்து நின்றாள். நீலா அதற்கு அவரிடம் நேரிடையாகப் பதில் ஒன்றும் கூறாமல், ஒஹோ!’ என்று தன் வில் போன்ற புருவங்களை நெரித்துச் சம்பகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். ‘பலரால் அலட்சியம் செய்யப்பட்டும் லட்சியம் நிறைவேறும் வரையில் அலட்சியத்தைச் சகித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/88&oldid=682397" இலிருந்து மீள்விக்கப்பட்டது