பக்கம்:பனித்துளி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பனித்துளி

போகிறாள் சித்தி!’ என்று கூறிவிட்டு ஆவல் ததும்பும் குரலில், “சித்தி, சித்தி! இ ங் கே வாயேன்” என்று கூப்பிட்டாள் குழந்தை. H.

நீலா ஒரு வித மிடுக்குடன் திரும்பிப் பார்த்தாள். ‘ஆகட்டும் வருகிறேன். இப்போது ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை பார்’ என்று கூறி விட்டு, விடுவிடு என்று மாடிப் படிகளைக் கடந்து சென்று விட்டாள். அவள் பேச்சைக் கேட்ட சமையற்கார மாமி முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கினாள். அவள் முகபாவம். ‘பார்த்தாயா அவள் கர்வத்தை?’ என்று கேட்பது போல் இருந்தது.

“ஏன் அம்மா சித்தி ஒருத்தருடனும் சரியாகப் பேச மாட்டேன் என்கிறாள்?’ என்று பானு சம்பகத்தைக் கேட்டாள்.

“எனக்கும் தெரிய வில்லையே, பானு, புதுசு பாரு. பழக வேண்டாமா?” என்று பதில் கூறினாள் சம்பகம். அவள் மனம் மட்டும் நீலாவின் போக்கை வியந்து கொண்டே இருந்தது.

‘குழந்தையோடு பேசுகிறதுக்குக் கூட வ ரு ஷ க் கணக்கில் பழக வேண்டுமா சம்பகம்? கபடமில்லாதவர் களைக் குழந்தை மனம் படைத்தவர்கள் என்று நாம் சொல்லுவதில்லையா?” -

சமையற்கார மாமி நீலாவின் பேரில் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறாள் என்பது சம்பகத்துக்குத் தெரிந்து விடவே பேச்சை வளர்த்த விரும்பாதவள் போல் அவள் அப்பால் போய்விட்டாள். m

பகல் மூன்று மணிக்கு நீலா காபி சாப்பிட கீழே வந்தாள். அப்பொழுது அவள் உடை அலங்காரம் வேறு தினுசாக மாறி இருந்தது. பதினெட்டு முழப் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளும் மீனாட்சி அம்மாள், -படு கர்னாடகமான மீனாட்சி அம்மாள்-தன் நாட்டுப் பெண் பைஜாமாவும், ஜிப்பாவும் அணிவதை ஆட்சேபிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/90&oldid=682400" இலிருந்து மீள்விக்கப்பட்டது