பக்கம்:பனித்துளி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பனித்துளி

‘நீலாவுடன் உனக்குச் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமா என்ன? என்றைக்காவது ஒருநாள் சங்கரன் எங்கள் வீட்டிற்கு வரும்போது சொல்லி அனுப்புகிறேன், வருகிறாயா?” என்று அன்புடன் கேட்டாள் கமலா.

‘நீலாவுடன் சிநேகம் செய்துகொள்ள வேண்டுமா? அது அவசியம்தானா?” என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நீலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டிருக்கும்போது, அவளுடன் நட்புக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது காமுவுக்கே புரியவில்லை.

“ஆகட்டும் பார்க்கலாம். அவ்வளவு பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைத்துவிடுமா?” என்று கமலாவுக்குக் கூறி விட்டு, அவளுக்குத் தேவையான தையல் புஸ்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள் காமு.

அவள் மனத்தில் நீலாவைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைவிடச் சங்கரனைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் ஓங்கி நின்றது.

விட்டிற்கு வந்ததும் காமு தன் தகப்பனாரிடம் சங்கரனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் கூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவளைத் திரஸ்கரித்த சங்கரனுக்கு அவளைவிட அதிக அழகான மனைவியோ, அவளைவிடக் குணத்தில் சிறந்தவளோ வாய்க்கவில்லை. இந்த எண்ணம் ஏனோ அவள் மனத்தில் ஒருவித திருப்தியை ஏற்படுத்தியது. பகல் சாப்பாட்டிற்காக ராமபத்திர அய்யர் கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இலை போட்டுப் பரிமாறிய பின்பு, காமு அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டாள். “காலையில் யார் வீட்டிற்கோ போக வேண்டுமென்று சொன்னாயே அம்மா, போயிருந்தாயா?” என்று பெண்ணை விசாரித்தார் ராமபுத் திர அய்யர்.

எதைப் பற்றித் தானாகவே வலுவில் கூறவேண்டும் என்று நினைத்திருந்தாளோ அதே விஷயத்தைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/98&oldid=682408" இலிருந்து மீள்விக்கப்பட்டது