பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பன்னிரு திருமுறை வரலாறு


முதலிய தலங்களே வணங்கி மீண்டும் சீகாழிப்பதிக்கு வந்து சேர்ந்தார். சிலநாட் கழித்துக் காழியின் கீழ் பாலுள்ள மயேந்திரப்பள்ளி, குரு காவூர், திருமுல்லே வாயில் முதலிய தலங்களே வணங்கி மீண்டார். இந் நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனேவியார் மதங்கசூளாமணியாரும், கழுமலத் தீசன் கவுணியப்பிள்ளையார்க்கு மூவாண்டில் அருள் ஞானங் குழைத்து ட்டிய அற்புத நிகழ்ச்சி கேட்டுத் திருஞான சம்பந்தரை வணங்குதற்குச் சீகாழிப்பதியை யனேந் தனர். அவ்விருவரது வரவறிந்த பிள்ளேயார், அவர் களே எதிரேற்று அழைத்துக் கொண்டு திருத்தோணி புரத் திருக்கோயிலின் புறமுன்றிலிற் கொடுபோந்து 'ஐயர், இசையமைந்த யாழினே உங்கள் இறைவர்க்கு இயற்றும் எனப் பணித்தருளினர். திருநீலகண்ட யாழ்ப்பானர் பிள்ளேயாரைத் தொழுது தந்திரி யாழினே வீக்கி இசையாராய்ந்து இறைவற்குகந்த பாணியினே ஏழிசை வல்ல மதங்கசூளாமணியாருடன் பாடி, யாவரும் வியந்து போற்ற யாழிலிட்டு வாசித்துப் போற்றினர். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனேவியாரும் தங்குதற்கென ஆளுடைய பிள்ளையார் தனியில்லம் அமைத்துக் கொடுத்து நல்விருந்தளித் தார். பிள்ளேயார் பாடிய திருப்பதிகங்களேக் கேட்டு உளமுருகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் அத்திருப் பதிகங்களைத் தம் யாழின் முறைமையில் வாசித்து எவ்வுயிரும் மகிழ்வித்தார்.

தில்லைச்சிற்றம்பலப் பெருமான வழிபட விரும்பிய திருஞானசம்பந்தர், தந்தையாரும் திருநீலகண்டப் பெரும்பாணரும் அடியார்களும் புடைசூழச் சீகாழிப் பதியினின்றும் புறப்பட்டுக் கொள்ளிடத் திருநதியினே க் கடந்து செல்வ மல்கிய தில்லையில் தென்றிசை வாயில் வழியே உள் புகுந்தார். எழுநிலக் கோபுரத்தைத் தொழுது போற்றிப் பொன் மாளிகையினே வலங் கொண்டு பேரம்பலத்தையிறைஞ்சிக் கூ த் த ப் பெருமான் திருமுன்பு திருவணுக்கன் திருவாயிலே