பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 99

மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவிஞர் வேடநிலைகொண்டவரை வீடுநெறி காட்டிவினே

வீடுமவரே.

என்ற பாடலே முதலாகக்கொண்டதாகும். பாடும் பாடல் மறையாகவும் திருமுடியிற் சூடுங்கண்ணி வெண்பிறையாகவும் உமையம்மையார் தனது ஒரு பாகத்தின் கண்ணே திகழவும் திரியுமியல்பினவாகிய மும்மதில்களேயும் ஒரம்பில்ை தீயுண்ணச்செய்து (எம் பொருட்டு முத்துப்பந்தரினே) எழில்பெறக் காட்டி (அதல்ை வெயில் வெப்பந்தணியும்படி) நிழலைக் கூட்டியருளிய பொழில்சூழ்ந்த பழையாறையின் ஒரு பகுதியாகிய மழபாடிக் கூற்றிலுள்ள பட்டீச்சரத்தில் வீற்றிருந்தருளும் அரவாபரண ராகிய இறைவர், எக்கா லத்தும் தமது திருவேடத்தினே இடைவிடாது நினேந் துருகும் ஒருமையுள்ளத்தையுடைய அடியார்களே வீட டையும் நன்னெறியிற் செலுத்தி அவர்களேத் தொடரும் இருவினேகளையும் நீக்கியருளும் பேரருளுடையார் என் பது இத் திருப்பாடலின் பொருளாகும். திரிபுரத்த வுனருடைய மும்மதில்களேயும் பொடிபட எரித் தருளிய இறைவன், இப்பொழுது எமக்குத் தண்ணிழல் தரும் முத்துப்பந்தரினே எழில்பெறக் காட்டியருளி ன்ை என்பார், மதில் மூன் ருெர் கணேயால் கூட எ ரி யூட்டி, எழில் காட்டி நிழல் கூட்டு...... கட்டரவினுர்’ எனக் குறிப்பில்ை அறிவுறுத்திய திறம் உய்த்துணரத் தக்கதாகும்.

உலவாக்கிழி பெறுதல்

திருஞானசம்பந்தர் பட்டீச்சு ரத்தினின்றும் புறப் பட்டுப் பல தலங்களேயும் பணிந்து போற்றித் திருவா வடுதுறையில் அமர்ந்திருந்தார். அ ந் நி லே யி ல் அவருடைய தந்தையார் சிவபாதவிருதயர் தாம் வேள்வி செய்தற்குரிய காலம் அணுகியதெனத் தெரிவித்து அதற்குரிய பொருள் வேண்டுமெனக் கூறினர். அவரது வேண்டுகோட் கிசைந்த பிள்ளே