பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பன்னிரு திருமுறை வரலாறு


பற்றி வருத்தற்குரிய தென்னும் உலகியல் முறையினே யொட்டி ஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவன் திருவருளேயெண்ணி இத் திருப்பதிகத்தைப் பாடி யருளினர் எனத் தெரிகிறது. இந் நுட்பம்,

அப்ப குலவா யாதி யருளில்ை வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக் கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே

எனவரும் இப்பதிகத் திருக்கடைக் காப்பினுல் இனிது விளங்கும். பாண்டி மாதேவியாராலும் குலச் சிறையா ராலும் உபசரிக்கப்பெற்று மதுரையில் தங்கிய ஞான சம்பந்தப் பிள்ளேயார், அன்றிரவு சமணர்கள் தம்மடத் திலிட்ட தீயினைப் பாண்டியனேப்பற்றி வருத்துக எனப் பணித்தருளிய இந் நிகழ்ச்சியினே,

  • பத்திச் சிவமென்று பாண்டியமா தேவியொடும்

கொற்றக் கதிர் வேற் குலச்சிறையுங் கொண்டாடும் அற்றைப் பொழுதத் தமனரிடு வெந்தீயைப்த பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனே என்னவலான் '

என வரும் தொடர்களில் நம்பியாண்டார் நம்பி தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருஞான சம்பந்தர் தங்கிய திருமடத்தில் இரவில் சமணர்கள் தீயிட்ட செய்தி பொழுது புலர்ந்ததும் வெளிப்படுவதாயிற்று. அதனேக் கேள்வியுற்ற மங்கை யர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மனநடுக்கமுற்றனர். “இக்கொடியோர் வாழும் நாட்டிலேஞானசம்பந்தப்பிள் ளேயாரை வரவழைத்த நாம் இறப்பதே நன்று’ எனத் துணிந்தனர். பின்பு திருமடத்திலே தீதின்மை யறிந்து ஒருவாறு ஆறுதல் பெற்றனர். இந்நிலையிலேயே பாண்டி மன்னனே வெப்புநோய் பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர்கள் பாண்டிமாதேவியார்க்கும் அமைச்சர்க்

1. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை.