பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 薰台量

குரிய பயன் சிவனடியார்களே அமுது செய்வித்தலும் இறைவனது திருவிழாப் பொலிவுகண்டு மகிழ்தலுமே யென்பது உண்மையானல், பூம்பாவாய் நீ உலகர் முன் உயிர்பெற்று வருக எனப் பூம்பாவையை நோக்கி அழைக்கு முகமாக,

மட்டிட்ட புன்னேயங் கானல் மடமயிலேக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் .காணுதே போதியோ பூம்பாவாய் وهناكامواته

என்ற திருப்பாடலே முதலாகக்கொண்ட திருப்பதிகத் தினப் பாடியருளினர். ஞானசம்பந்தர் வாக்காகிய இவ் வமுதம் குடத்திலுள்ள அங்கத்திலே பொருந்த அவ் வெலும்பனேத்தும் ஒருருவாய் வடிவு நிரம்பியது. இவ்வாறு முதற்பாடலிலேயே வடிவு பெற்ற பூம்பாவை, இப்ப திகத்தில் இரண்டுமுதல் ஒன்பது வரையுள்ள எட்டுப் பாடல்களப்பாடிய அளவில் பன்னிரண்டு வயது உடையளாயினுள். சிந்தையில் தெளிவில்லாத சமணரும் புத்தரும் இச்செய்கை இயல்வதன்று என்று கூறுவார்கள் என்னும் கருத்தமைய,

உரிஞ்சாய வாழ்க்கை அமண் உடையைப்போர்க்கும் இருஞ்சாக்கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலே சூழ்ந்த கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணுதே போதியோ பூம்பாவாய்.

என்ற பத்தாந் திருப்பாடலைப் பாடிய அளவில், செந் தாமரை மலர் விரிய அதனுள்ளே யிருந்து எழும் திரு மகளேப்போன்று பூம்பாவை குவித்த செங்கையுடன் குடம் உடைய எழுந்து வெளிப்பட்டுத் தோன்றினுள். பிள்ளையார் திருக்கடைக்காப்புச்சாத்தி இறைவனைப் பரவினர். பூம்பா வையைக் கண்ட சிவநேசர், பிள்ளே யாருடைய திருவடிகளிலே விழுந்து வணங்கினர். பூம்