பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பன்னிரு திருமுறை வரலாறு


‘ஞான மெய்ந்நெறி தான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்லாம்’ என்று,

காத லா கிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.

எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினப் பாடிப்போற்றி, இம் மனத்தில் வந்தோர் யாரும் இழி தகைப் பிறவி நோய்தீர இச்சோதியினுள்ளே புகுமின்’ என எல்லோரையும் அன்பால் அழைத் தருளினர். பிறவிப் பெருங்கடலிற் பட்டுக் கரைகாணுது வருந்தும் இயல்பினராகிய மக்கள், திருஞானசமபந் தரது திருமணத்தைக் கண்டு உடன் சேவித்துச் செல் லும் நற்பேற்றினலே அங்கே தோன்றிய ஈறில் பெருஞ் சோதியிற் புகுந்து பிறவா நெறியாகிய பேரின்ப வாழ் வைத் தலைப்பட்டார்கள். திருநீல நக்கநாயனுர், முருக நாயனுர், சிவபாதவிருதயர் நம்பாண்டர் நம பி, திருநீலகண்டப்பெரும்பானர் முதலிய திருத்தொண் டர்கள், தங்கள் வாழ்க்கைத் துனேவியாரொடும் சுற்றத் தாரொடும் சோதியிற் புகுந்தார்கள், ஆளுடைய பிள்ளே யாருடைய பரிசனங்களும் ஆறுவகைச் சமயத் தினராகிய அருந்தவர்களும் அடியார்களும் முனிவர் களும் பிறரும் இறைவனது ஈறில்பெருஞ் சோதியினிற் புகுந்து இன் புற்ருர்கள். இங்ங்னம் திருமணங்காண வந்தோர் யாவரும் சோதியிற் புகுந்த பின்னர்த் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில் வளர் சோதியை வலஞ்செய்து அதனுள்ளே புகுந்து சிவபெரும ைேடு ஒன்றியுட குனர். உடனே அச்சோதி மறையத் திருப்பெரு மனத் திருக்கோயில் முன்போலவே தோன்றியது. காலம் தாழ்த்துதவந்தமையால் சோதியுள் நுழையும் நற்பேறில்லாதவர்கள் கலங்கி நின்றர்கள். விண்ண வர், முனிவர் முதலியோர் தமது ஏசறவு தீர இறைவனே