பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #7;

பாவையை உயிர் பெற்றெழச் செய்த காலத்து அவர்க் குப் பதினறு வயது நடைபெற்றதெனச் சேக்கிழா ரடிகன் குறிப்பிட்டுள்ளார். பிள்ளேயார் அவ்வற்புத நிகழ்ச்சிக்குப்பின் பல தலங்களே இறைஞ்சிச் சீகாழிப் பதிக்கு வருதற்கு ஏறக்குறைய மூன்று திங்களாதல் கூடும். பதினருண்டு ஆடவர்க்குரிய மணப் பருவமா தலின் அப்பருவத்தே பிள்ளேயார்க்குத் திருமணம் நிகழ்வதாயிற்றென்பதும் அத்திருமண நாளிலேயே பிள்ளையார் இறைவனது சோதியிற் கலந்தமையால் அப்பெருந்தகையார் இவ்வுலகில் வாழ்ந்த காலம் பதினருண் டென்பதும் நன்கு துணியப்படும். தொன் ஞானசம்பந்தர்க்கு அந்தம்பதினறறி’ என வழங்கும் பழம்பாடற்ருெடர் இதனே வலியுறுத்துவதாகும்.