பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பன்னிரு திருமுறை வரலாறு


தவிர்வாயாக, உன்னுடன் பிறந்த தம்பி முன்னமே முனியாகி எமையடையத் தவமுயன்ருன், அன்ன வனே இனிச் சூலேநோயைத் தந்து ஆட்கொள்வோம்' என அருள் செய்து அவ்வண்ணமே தருமசேனர் வயிற் றிற் சூலேநோயினேப் பற்றச்செய்தார்.

சூலை நோயால் வருந்துதல்

இறைவனருளால் தருமசேன ரைப் பற்றிய சூல்ே நோய், வடவைப் பெருந்தீயும் ஆலகாலமாகிய நஞ்சும் வச்சிரப்படையும் என இங்ங்னம் கொடுமை விளேப்பனவெல்லாம் ஒன்ருகத்திரண்டு வருத்தினு ற் போல் குடரைக் குடைந்து வருத்திற்று. அந்நோயின் வருத்தத்தைப் பொறுக்க லாற்ருத தருமசேனர், நடுக்க முற்றுப் பாழியறையில் மயங்கி வீழ்ந்தார். அவர் சமண சமயத்தில் தாம் கற்றுவல் ல மந்திரங்களா ) அந்நோயினைத் தடுக்கமுயன்றும் அது தணியாது மேன்மேலும் முடுகி வருத்துவதாயிற்று. தருமசேனர் படும் து ைபத்தைக்கண்ட சமணர்கள் பலருங்கூடி "உயிரைக்க வரும் கொடிய நஞ்சினே பொத்த சூலை நோய் இவரைப்பற்றி வருத்துகின்றதே. இதற்கு இனி நாம் என்ன செய்வோம்’ எனப்பெரிதும் உளங்கலங் கினர்கள். தம் கையிலுள்ள குண்டிகை நீரை மந்தி ரித்துத் தருமசேனர்க்குக் கொடுத்துக் குடிக்கும்படி செய்தார்கள் மயிற்பீலி கொண்டு காலளவும் தடவி ஞர்கள். அந்நிலேயிற் சூலேநோய் முன் னிலும் பன் மடங்கு அதிகரிப்பதாயிற்று. அதுகண்டு சோர்வுற்ற சமணர்கள், ஐயோ இனி நாம் என் செய்வோம்’ எனக் கலக்கமுற்ற மனத்தினராய், இது நம்மா ற் போக்குதற்கரிய ந்ோயாகும்’ எனச் சொல்லித் தரும சேனரைக் கைவிட்டு அகன்று சென்றனர்.

சூலேநோயாற் சோர்வுற்ற தருமசேனர், தம் மைச் சமணர்களெல்லாருங் கைவிட்டு அகன்ற நிலை