பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

பன்னிரு திருமுறை வரலாறு


எனத் தொடங்கும் கருப்பதிகத்தைப் பாடத் தொடங்கி, ஒவ்வொரு திருப்பாட்டிறுதியிலும் கெடிலப் புனலும் உடையாரெ ருவர் தமர் நாம், அஞ்சுவது யாதொன்றுமில்லே, அஞ்ச வருவதுமில்லே’ என்று பாடி பருளினர். கண்டோர் அஞ்சும்படி அங்கு வந்த யானே யானது, அன்புருவாகிய திருநாவுக்கரசரை வலஞ் செய்து அவர்க்கெதிரே நிலத்தில் தாழ்ந்து இறைஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்றது.

இவ்வாறு சமணர்களால் ஏவப்பட்டுத் தம்மைக் கொல்லவந்த மதயானே இறைவனருளால் தம்மைக் கொல்லாது மீண்ட தகைமையினேப் பின்னுெரு காலத்து நினேந்து உள் முருகிய திருநாவுக்கரசர், மக்க ானேவரும் இறைவன் திருவருளேத் துணை யென நம்பி எத்தகைய இடையூறுகளுக்கும் மனங்கலங்காது அச்ச மின்றி வாழ்தல் வேண்டுமென் னும் பெருவிருப்புடைய சாய், உலக மக்களே நோக்கி மக்களே தும் தலைமேல் மலேயே வந்து வீழ்ந்தாலும் நீங்கள் நின்ற நிலேயி னின்றும் ஒரு சிறிதும் கலங்காதிருப்பீராக. எல்லாவுல குக்கும் தலேவணுகிய சிவபெருமானுடைய சுற்றத்தா ராகிய அடியார் கசேக் கொலே செய்தலேயே தொழிலாக வுடைய த ய சீன யு ம் கொன் நிடவல்லதோ? (கொல்லவல்லதன்று) எனத் தம் அநுபவ வாயிலாக உணர்ந்த உண்மையினே,

மலேயே வந்து விழினும் மனிதர்காள் நிலேயினின்றும் கலங்கப் பெறுதிரேல் தலைவனகிய ஈசன் தமர்களேக் கொல்செய் யானேதான் கொன்றிடுகிற்குமே.

சனவரும் திருப்பாடலில் அறிவுறுத்தியுள்ளார், கொல்லுதற் பொருட்டுத் தம்மேல் ஏவப்பட்ட மதயானே இறைவனருளால் தம்மைக் கொல்லாது மீண்ட செய்தி யினே இத்திருப்பாடலால் திருநாவுக்கரசர் குறிப்பாக வெளியிட்டருளிய திறம் நினைந்து மகிழத்தக்கதாகும்.