பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

பன்னிரு திருமுறை வரலாறு


மகிழ்ந்தார். பின்பு தமக்குத் திருவடி சூட்டியருளிய நல்லூர்ப்பெருமானேக் காண விரும்பித் திரு நல்லு: ரடைந்தார். அங்கிருந்து இறைவனேப் பரவிய அப்ப ரடிகள் திருவாரூர் தொழ நினேந்து வலஞ்சுழி, குட மூக்கு, நாலூர், சேறை, பெருவேளுர், விளமர் முத லிய திருத்தலங்களைப் பணிந்து திருவாரூர் சென்றனே ந் தார். அமணர்கள் செய்த வஞ்சனேகளெல்லாங் கடந்து கல்லே மிதப்பாகக் கடல் கடந்தேறிய திரு. நாவுக்கரசர் ஈண்டெழுந்தருள ப் பெற்ருேம்’ எனப் பெருமகிழ்வெய்திய திருவாரூர் நகரத்தார், அப்பரடி களே எதிர்கொண்டழைத்துப் போற்றினர்கள். தமக்கு அருள் சுரந்த இறைவனது திருவருட் பெருமையை யெண் ணிய திருநாவுக்கரசர், அன் பின் பிணிப்புச் சிறிதுமில்லாத கொடியோராகிய புறச் சமயத்தாருடன் கூடி, வந்தடைந்த சூலேநோயினுல் அவர்களே விட்டு நீங்கிய எளியேனுற் பெறத் தக்கதோ புற்றிடங் கொண்ட பெருமானகிய சிவனது அடியார்களுக்குத் தொண்டு செய்யும் பெரும்பேருகிய இப் புண்ணியம்’ என்றதோர் உணர்ச்சிமிக,

குலம்பலம் பாவரு குண்டர் முன்னே நமக் குண்டுகொலோ அலம்பலம் பா வரு தன்புன லாரூ ரவிர் சடையான் சிலம்பலம் பாவரு சேவடியான் திருமூ லட்டானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம்

புண்ணியமே.

என வரும் திருவிருத்தத்தைப் பாடித் திருவாரூர்த் திருவீதியுட் புகுந்தார். அடியார்களுடன் திருக்கோ யிலின் தோரண வாயிலேயடைந்து தேவாசிரிய மண் டபத்தை இறைஞ்சினர். திருமாளிகை வாயிலுட் புகுந்து புற்றிடங்கொண்ட பெருமான் திருமுன்னர் நின்று பணிந்து திருத்தாண்டகம் படித் துதித்தார். காண்டலே கருத்தாய் நினேந்திருந்தேன்’ என்னுங் கலேப்பதிகம் பாடிப் பரவிஞர். திருக்கோயிலே வலம்