பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 235

எண்ணியது முடிக்கும் உண்ணு நோன்பு

பின்பு திருநாவுக்கரசர் பழையாறை யென்னுந் தலத்தையடைந்து அங்குச் சமணர்களால் மறைக்கப் பட்ட வடதளி யென்னும் கோயிலின் அருகே சென்ற பொழுது, அவருடைய கைகள் வடதளி யிறைவரைத் தாமே தொழு தன. அந் நிலேயில் அங்கு எதிர்ப்பட்டார் சிலர், இது சிவபெருமானுக்கு உரிய திருக்கோயிலே இவ் விமானம் அமணர்களால் மறைத்துக் கட்டப்பட்ட பொய்யான விமானமே. எனக் கூறினர்கள். அது கேட்டு மனம் பொருத வாகீசர், அவ் விமானத்தின் அருகே ஒரிடத்தில் அமர்ந்து இறைவன் திருவடிகளேச் சிந்தித்து ‘எம்பெருமானிரே, அமணர் வஞ்சனேயால் மறைத்த மறைப்பினே யகற்றி அவர்களது ஆற்றலேச் சிதைத் திடுவீராக. அடியேன் நுமது திருமேனி வண் னத்தைக் கண்டு வணங்கியன் றிப் போகேன்’ என உண்ணுநோன்பு மேற்கொண்டிருந்தார்.

சிவபெருமான், பழையாறை நகரத்திலுள்ள வேந்தனது கனவில் தோன்றி, நாம் சமணர்களால் வடதளியில் மறைக்கப்பட்டிருக்கிருேம்’ என அடை யாளங்களுடன் சொல்லி, நம்மை நாவுக்கரசு வெளிப் படக் கண்டு கும்பிடும்படியாக நீ முறையற்ற அமணர் களே யழித்துப் போக்குவாயாக என்றுரைத்து மறைந் தருளினர். விழிப்புற்றெழுந்த மன்னன் , தான் கண்ட கன வினே அமைச்சர்களுக்குச் சொல்லி வியந்து இறை வன் அருளிச்செய்த அடையாளத்தின் படியே வட தளியை யடைந்து அங்கு அமணர்கள் செய்த வஞ்ச னேயைக் கண்டறிந்தான். உறைப்புடைத் திருத் தொண்டராகிய வாகீசர் திருவடிகளில் வீழ்ந்து வனங் கின்ை வட தளியாகிய திருக்கோயிலே வஞ்சனேயால் மறைத்த சமணர்களே யானேகளால் அழித்துப் போக் கின்ை. அவர்கள் கட்டிய பொய்யான விமான த்தை நீக்கிச் சிவபெருமானுக்குப் புதியதொரு விமானம்