பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 38 :

ல்மர்ந்த பெருமானே நாடோறும் வழிபட்டு வரும் கட மையுடையராய் விளங்கினர்.

இவ்வாறு சிவபெருமானே வழிபடுதல் கருதிப் பரவையார் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒரு நான், தம்பிரான் தோழராகிய சுந்த மூர்த்தி சுவாமிகள், பண்டைப் பிறப்பில் அன் புடைய ராகிய காதலரை மீளவும் சேர்த்து வைக் கும் நல்லுழிாகிய இறைவனது திருவருள்சனேயால் பரவை யாரைக் கண்டு காதல் கொண்டார். பரவையாரும் அவ்வாறே பண்டை நல்விதியின் துரண்டுதலால் நம்பி யாரு ரைக் கண்டு காதல் கொண்டார். அளவிறந்த காதலால் அவர் தம் உள்ள த்தே நிறைந்த நாணம் மடம், அச்சம், பயிர்ப்பு ஆகிய பெண் மைக் குணங்கள் தான்கும் ஒரு புடை சாய்ந்தன. எனினும் இறை வனேத் தொழும் அன்பே அவரது உள்ளத்தை நிறை புடைய தாக்கி அவரை இறைவன் திருமுன்னர்க் கொண்டுசேர்த்தது. எனவே பரவையாரும் பூங்கோயி லமர்ந்த பெருமான் திருமுன்னர்ச் சென்று சேர்ந்தார்.

இங்ங்ணமாக, பரவையாரது பேரழகில் ஈடுபட்ட தம்பியாரூரர், அயலே நின்றவர்களே நோக்கி என் மனங் கவர்ந்த மயிலியலாகிய இவள் யார்’ என வினவினர். அது கேட்டு அங்குள்ளவர்கள் அவர் நங்கை பரவை யார், வானேர்க்குத் தொடர்வரிய தூய்மையுடையார்’ எனக் கூறினர்கள். பரவையார்பால் கல்லையற்ற காத லுடயராகிய தம்பிரான் தோழர், என்னே யாட்கொண் டருளிய இறைவனே யடைந்து எனது கருத்திற்கு இசைவு பெறுவேன்' என்னும் எண்ணமுடைய ராய், புற்றிடங்கொண்ட பெருமான் திருமுன்னர் ச் சென் ரூர். நங்கை பரவையார், இறைவனே வணங்கி வலம் வந்து அங்கிருந்து மற்ருெரு புறமாகப் புறப்பட்டுப்போயினர். ஆரூர்ப்பெரும ன் திருவடிகளே யிறைஞ்சிப் போற்றிய வன்ருெண்டர், பரவையாரைத் தமக்கு வாழ்க்கைத்