பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பன்னிரு திருமுறை வல மு:

துணையாகத் தந்தருளும்படி ஆர த காதலினுற். பணிந்து வேண்டினர். இறைவனுடைய திருவடியை யன்றி மற்றெதனையும் விரும்பி ய சயாத என்னுள் ளத்தை மயக்கிய இன்னுயிராம் நங்கை எவ்வழியே போயினுள், என்று இவ்வாறு கூறிப் பச வையா வர த் தேடிச் சென்ருர் ஆரூரிற் கோயில்கொண்டருளிய சிவபெருமான் என்னுற் காதலிக்கப்பெற்ற பவை யாரை எனக்குத் தந்து னது ஆவியை நல்குவர் என்னும் நம்பிக்கையுடையராய்த் தேவாசிரிய மண்ட பத்தின் ஒருபால் அமர்ந்திருந்தார். அந் நிலையில் ஞாயிறு மறைய மலேப்பொழுதும் வந்தது.

இவர் இங்ங்னமாக, பூங்கோயிலமர்ந்த பெருமானே வணங்கி மீண்ட பரவையார், நம்பியாரூரர் பாற் சென்ற தமது உள்ளத்தை ஒருவாறு மீட்டுக்கொண்டு பெரிதும் மயக்கமுற்றுத் தமது மாளிகையை யடைந்து மலரமளி யில் அமர்ந்து தம் அருகிருந்த பாங்கியை நோக்கி, நாம் ஆரூர்ப் பெருமானே வழிபடச் சென்றபொழுது நம் மெதிரே வந்தார் யாவர் ' என வினவிஞர். மாலும் அயனுங் காணுதற்கரிய சிவபெருமானே. இவ்வுலகில் மறையவராகி வந்து வலிய ஆட்கொள்ளப்பெற்ற சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனர் நம்பியா ரூரரே அவர் ' எனப் பாங்கி விடை பகர்ந்தாள். அது கேட்ட பரவையார், எம்பிரான் தமரேயோ அவர் என்றுரைப்பதன் முன்னமே வன்ருெண்டராகிய அவர்பாற் கொ ண்ட காதல் மேன்மேலும் பெருகி வளர் வதாயிற்று. பரவையாரும் அமளியின்மேல் வீழ்ந்து வெதுப்புற்றுப் பலவாறு புலம்பி வருந்தினர்.

இவ்வாறு நம்பியாரூரரும் நங்கை பரவையாரும் ஒருவர்க்கொருவர் கொண்ட பெருங் காதலால் உறக்க மின்றி நள்ளிரவில் தனிமையுற்று வருந்துதல் கண்ட திருவாரூரிறைவர், அன்றிரவே சிவனடியார்கள் முன் தோன்றிப் பரவையாரைச் சுந்தார்க்குத் திருமணம்