பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 29 |

பொன்பெறுதல்

நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு வலிவலம் என்ற தலத்தையடைந்து மாதொருபாகனகிய பெரு மானேக் கண்டுமகிழ்ந்த நம்பியாரூர், நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டுகந் தீர் என இறை வனப் போற்றுங் கருத்துடன்,

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ்மாலே சொல்லியவே சொல்லி யேத்துகப்பானேத்

தொண்டனே னறியாமை யறிந்து கல்லியன் மனத்தைக் கசிவித்துக

கழலடிகாட்டி யென் களைகளேயறுக்கும் வல்லியல் வரனவர் வணங்க நின்ருனே

வலிவலந்தனில் வந்து கண்டேனே.

என்ற பாடலால் தமக்கு முற்பட்ட அருளாசிரியர்களா கிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய பெரு மக்கள் இருவரும் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பதிகங்களில் சிவபெருமானுக்குள்ள ஈடுபாட் டினேக் குறிப்பிட்டுப் போற்றி மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்பொழுது பங்குனி யுத்திரத் திரு விழா அணுகியது. அதனேயுணர்ந்த சுந்தரர், அத் திருவிழாவிற் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னேக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புக லூ ைரி அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறை வனப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத் திற்குச் செல்லத் திருவுளங்கொண்டு அடியார் களுடன் கோயில் வாயிலிலே சிறிது நேரம் இ8ளப்பாறி யிருந்கார். அந் நிலையில் இறைவன் திருவருளால் அவர்க்கு உறக்கம் வருவதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக அங்கு அடுக்கிவைக்கப்பட்டுள்ள செங்கற்களேக் கொண்டுவரச்செய்து அவற்றைத்