பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 293

சுந்தார், திருப்பனேயூரின் புறத்தே செல்லும் பொழுது அப்பதியிற் கோயில் கொண்டருளிய சிவபெருமான் நம்பியாரூரர் க்கு விருப்புடன் ஆடல்காட்டி யருள்புரிந் தார். அவ்வழகியதெய்வக்காட்சியைக்கண்டு மகிழ்ந்த வன்ருெண்டர், ஆர்வமுடன் எதிர்சென்று வணங்கி,

மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும்

வளர் பொழிற் பாடல் வண்டறையும் பழனத் திருப்பனேயூர்த் தோடு பெய்தொரு காதினிற்குழை துரங்கத்தொண்டர்

கள் துள்ளிப்பாட நின் ருடுமாறு வல்லார் அவரே அழகியரே.

என வரும் திருப்பதிகத் தினேப்பாடிப் போற்றித் திருவா ரூரை யடைந்து தெய்வப் பெருமாளாகிய இறைவ ரைப் பணிந்து போற்றிப் பரவையாருடன் மகிழ்ந் திருந்தார்.

இறைவன் எழுந்தருளிய திருத்தலங்கள் பலவற். றையும் வழிபட எண்ணிய நம்பியாரூரர். திருவாரூசி னின்றும் புறப்பட்டு நன்னிலம், விழிமிழலே, திருவாஞ்சி யம், நறையூர்ச் சித்தீச்சரம், அரிசிற் கரைப்புத்துர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலய நல்லூர், குட மூக்கு, வலஞ் சுழி, நல்லூர், சோற்றுத் துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங் களே யிறைஞ்சித் திருவாலம்பொழிலையடைந்து இறை வனே வணங்கியிருந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது சிவபெருமான் அவரது கனவில் தோன்றி * மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தருளினர். துயிலுணர்ந்தெ ழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து அதன் வடகரையைச் சேர்ந்து திருமழபாடிக்குப் போய் மழபாடி யிறைவர் திருமுன் நின்று,

பொன்னர் மேனியனே புலித்தோல் யரைக்கசைத்து மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே