பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 盛99

படி பணித்துத் தாம குளத்திலே யிறங்கி முன் முது குன்றில் மணி முத்தா றறிலிட்ட பொன்னைத் தேடினர். அவர் வாயிலாகச் செந்தமிழ்ப் பாமாலையை யணிய விரும்பிய சிவபெருமான், அக்குளத் திலே பொன் விரைவில் தோன் ருதபடி செய்தருளினர். அந்நிலையிற் பரவையார் தம் கணவரை நோக்கி ஆற்றிலே யிட்டுக் குளத்திலே தேடுவீர், இறைவன் திருவ ஆளே யறியும் முறை இதுவோ' என நகைத்துரைத்தார் அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே, பரவையிவள் நகைத்துரையாதபடி தேவரீர் அடி யேற்குமுன் அருளிச்செய்த வண்ணம் செம்பொன்னே த் தந்தருள் வராக என வேண்டுவார்,

பொன்செய்த மேனியினரீர் புலித்தோலே யரைக் கசைத்தீர். முன்செய்த மூவெயிலு மெரித்தீர் முதுகுன்றமர்ந்தீர் மின்செய்த நுண் ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேனிடடளங்கெடவே.

எனவரும் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றினர். உம்பரும் வானவரும் உடன் நின்று காண அடியே னுக்குத் திருமுது குன்றத்தில் நீவி அளித்த செம் பொன்னே விரைவிற் பெருதுபோன தளர்ச்சியினுலுண் டாகிய கையறவாகிய துன்பத்தைப் பரவையாகிய இவளது முன்னிலையிலே நீக்கியருளுதல் வேண்டும்

என் பார்,

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் வம்பமருங்குழலாள் பரவையிவள் வாடுகின்ருள் எம்பெருமான் அருளிர் அடியேன் இட்டளங்கெடவே. எனக் குறையிரந்து வேண்டினர். இவ்வாறு இத் திருப்பதிகத்தின் எட்டாந் திருபாடலளவும் வேண்டி யும் இறைவன் பொன்னத் தந்தருளவில்லே.

ஏத்தாதிருந்தறியேன் இமையோர் தனிநாயகனே மூத்தாயுலகுக்கெல்லா முதுகுன்றமமர்ந்தவனே