பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

பன்னிரு திருமுறை வரலாறு


கொண்ட கவலேயை ஒழிக’ என அருள் செய்தார். 'ஒன்றும் அறியா நாயேனே அன்று வலிய வந்து வெண் ணெய் நல்லூரில் ஆட்கொண்டருளினtர். இன்றும் எனது உயிர் காக்க இவளே மன ஞ் செய்து தர ஏன்று நின்றீர் ன நம்பியாரூரர் ஒற்றியூரிறைவரை ப் போற்ற வணங்கினர்.

இவ்வாறு நம்பியாரூரர்க்கு அருள்புரிந்த சிவபெரு மான், அன்று நள்ளிரவிலே கன்னிமாடத்தில் துயில் கொள்ளும் சங்கிலியார் கன விலே தோன்றி, சாரும் தவத்துச் சங்கிலியே, யான் சொல்வதனைக் கேட்பா யாக. என்பால் மிகுந்த அன்புடையவனும் அன்று திரு வெண்ணெய் நல்லூரில் யாவரும்காண என்னுல் தடுத் தாட்கொள்ளப் பெற்றவனும் என் அன்பிற் கினிய தோழ னும் ஆகிய சுந்தரன், தனக்கு மனேவியாக உன்னே த் தரும்படி என்னே வேண்டி நின்றன். நீ மகிழ்ச்சியுடன் அவனே மணந்து கொள்வாயாக’ எனப் பணித்தருளி ஞர். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சங்கிலியார், இறைவன் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சி எம்பெரு மானே, நும்மால் அருளிச்செய்யபெற்ருர்க்கு யான் உரியேன். தங்களது ஆணேயைத் தலைமேற் கொண் டேன். என்னே நம்பியாரூரர்க்கு மணஞ் செய்து கொடுக்கும் நிலையில் மலேமகளாரைப் பிரிவின்றி ஒரு பாகத்திற் கொண்டருளிய தங்கள்பால் அடியேன் தெரிவித்துக்கொள்ள வேண்டியதொன் றுண்டு. தம்பி ரான் தோழராகிய அவர் திருவாரூரில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிலைபெறத் தங்கியிருக்கும் விருப்ப முடையவரென்பதனையும் தாங்கள் அறிந்தருளல் வேண்டும் என வேண்டிக்கொண்டார். அது கேட்ட இறைவர், சங்கிலியாரை நோக்கி, பெண் ணே, அவ் வன்றெண் டன் உன்னேப் பிரியேன் என உனக் கொரு சபதஞ் செய்து தருவான் ” எனக் கூறி யருளினர்.