பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு § 1 |

பின்பு இறைவர் சுந்தரரை யடைந்து "நம் சங்கிலி பாற் சென்று நினது விருப்பத்தைத் தெரிவித்தோம். அதற்கு உன்ற்ை செய்யத்தக்கதொரு காரியமுளது ? என் ருர், அதுகேட்டு மகிழ்ந்த சுந்தரர் யான் செய்ய வேண்டுவது யாது’ என வினவ நீ இன்றிரவே அவள்பாற் சென்று நின்னேப் பிரியேன்” எனச் சபதஞ் செய்து கொடுத்தல் வேண்டும். இனி இக்காரியத்தில் நாம் செய்யத்தக்கது உண்டாயின் அதனேயும் கூறுக’ எனப் பணித்தருளினர். சங்கிலியார் பால் தம் மனத் தைப் பறிகொடுத்த நம்பியாரூரர். இறைவன் எழுந் தருளிய திருத்தலங்கள் பலவற்றையும் அடைந்து வழி படும் விருப்புடைய அடியேனுக்கு இவ்வாறு சபதஞ் செய்து கொடுத்தல் பெருந்தடையாகுமே” என்னும் நினேவுடைய ராய் இறைவரைப் பணிந்து ' எம்பெரு மானே அடியேன் சங்கிலிக்கு நின்னேப் பிரியேன்” எனச் சபதஞ்செய்து கொடுத்தற்காக அவளுடன் திருக்கோயிலில் நும் திரு முன்னர் வரும்பொழுது தேவரீர் அவ்விடத்தைவிட்டு ஆலயத்திலுள்ள மகிழ மரத்தடியின் கீழ் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என வேண்டிக்கொண்டார். இறைவரும் அவரது வேண்டு கோளுக்கு இசைந்தருளி, முன்போல் சங்கிலியார் முன் கனவிலே தோன்றி நங்கையே, சுந்தரன் உனக்குச் சபதஞ்செய்து தரு தற்கு இ ைசந்துள்ளான். அவன் திருக்கோயிலிலே நம் திருமுன்பு சபதஞ்செய்தற்கு வந் தால் நீ அதற்கு உடன்படாமல் மகிழமரத்தடியிலே சபதஞ்செய்து தரும்படி கேட்பாயாக’ என்று கூறி மறைந்தருளினர்.

அந் நிலையிற் சங்கிலியார் விழித்தெழுந்து வியப் புற்றுத் தம்முடைய பாங்கியர்களே எழுப்பித் தமக்குச் சிவபெருமான் கனவிலே தோன்றி அருள் செய்த எல்லா வற்றையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அது கேட்ட பாங்கியர் அச்சமும் அதிசயமும் பெருமகிழ்ச்சி