பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3 15

இகழ்ந்துரைத்தோன் இறந்து போகவே அந்நிகழ்ச்சி யினேக் கேட்டறிந்தபிறரும் மணம்பேச அஞ்சி விலகின மையால் மங்கல நூலணிதலாகிய திருமண ந் தடைப் பட்ட சங்கிலியார் என் பார் . வீயவே நூல் போன சங்கிலி என் ருர். நூல்போன சங்கிலி என்றது, மங்கல நூலணிதலாகிய திருமண ந் தடைப்பட்ட சங்கிலியார் எனவும், கற்றுத்துறை போய பொற்புடை நங்கை யாகிய சங்கிலியார் எனவும் இருபொருள் தந்து நிற்றல் அறிந்து மகிழத்தக்கதாகும். சங்கிலியாரை மணந்து கொள்ளவிரும்பிய சுந்தரர் ஒற்றியூரிறைவர் திருவடி களேப் பணிந்து அவரருளால் தவச்செல்வியாராகிய சங்கிலியாரை மணந்துகொண்டார் என்பார் சங்கிலி பாற், புகுமணக்காதலினல் ஒற்றியூருறை புண்ணி யன்றன் மிகு மலர்ப் பாதம் பணிந்து அருளால்............. புணர்ந்தான் ' என்ருர் . உலகம் நகும் வழக்காவது, "இரு மனேவியரை மனப்போன் அவ்விருவருள் ஒரு த் திக்கும் நல்லன் ல்லன்’ என உலகத்தாரால் நகைத் துரைக்கப்படும் இடர்நிலையினளுதல். இத்துன்பியல் நிலேயையும் ஒற்றியூர்ப் பெருமான் அருட்டுணே கொண்டு இன்ப அன்பினே வளர்க்கும் இனிய நல்வாழ் வாக நம்பியாரூரர் அமைத்துக் கொண்டாரென் பார் "இவ்வியனுலகம், நகும் வழக்கே நன்மையாப் புணர்ந் தான் நாவலு ரசே என்ருர்.

இனி, கணவனென மணம் பேசி முடிக்கப்பெற்ற மணமகன் இறந்துபோகவே கைம்மைநிலை யெய்திய மகளிரைப் போன்று மங்கல நூலிழந்த சங்கிலியாரைச் சுந்தரர் மீண்டும் மணந்துகொண்டமையே இவ்விய னுலகம் ந தும் வழக்கு’ என இப்பாடலிற் சுட்டப்பட்ட தெனக் கருதுவாரு முளர். சிவனருள் நிரம்பப்பெற்ற தகுதியுடைய சங்கிலியாரை அத்தகுதி சிறிதும் வாய்க் கப்பெரு தான் ஒருவன் மனம்பேசி யிகழ்ந்தமையால் விரைவில் இறந்தொழிந்தா னென்பதும், அவன்