பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

பன்னிரு திருமுறை வரலாறு


வழுக்கி விழினுந் திருப்பெயரல்லால் மற்றுதா னறியேன் மறுமாற்றம் ஒழுக்க என்கனுக் கொருமருந் துரையாய்

ஒற்றியூரெனும் ஊருறைவானே. என வரும் திருப்பதிகத்தினைப் பாடித் தமது பிழை பினேப் பொறுத்தருளும்படி ஒற்றியூர்ப் பெருமானேப் பரவிப் போற்றினர். இத்திருப்பதிகத்தில், * மூன்று கண்னுடையாய் அடியேன்கண்

கொள்வதே கணக்கு வழக்க கில் ஊன்றுகோலெனக் காவதொன் றருளாய் ’ எனவும்,

  • கழித்தலேப்பட்ட நாயதுபோல

ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து நீ அருளாயின செய்யாய் ’ எனவும்,

" அகத்திற் பெண்டுகள் நானென்று சொன்னல் அழையேல்போ குருடா எனத் தரியேன் முகத்திற்கண்ணிழந் தெங்கiனம் வாழ்வேன் ’’ எனவும் சுந்தரர் ஒற்றியூர்ப் பெருமானேயழைத்துப் பேசும் உரையாடல்கள் இரண்டு கண்களேயும் இழந் தமையால் அவரடைந்த பெருந்துயரத்தை நன்கு புலப்படுத்துவன வாய்ப் படிப்போருள்ளத்தை யுருக்கு வனவாகும்.

இங்ங்னம் சுந்தரர் கண்ணிழந்து நெஞ்சங் கலங்கி வருந்திய நிலையிலும் ஒற்றியூரிறைவர் அவர்க்கு விரைந்து அருள் புரிந்திலர். திருவாரூரைத் தொழ விரும் பிய சுந்தரர், உடன் வரும் தொண்டர்கள் வழிகாட்டிக் கொண்டு முன்னே சொல்ல வடதிருமுல்லே வாயிலே யடைந்தார். சொல்லரும் புகழான் தொண்டை மான் யானையை முல்லேக்கொடியாற் பிணித்து நிறுத்தி அவ்வேந்தனுக்கு எல்லேயிலின் பம் வழங்கியருளிய திருமுல்லைவாயிற் பெருமானேயிறைஞ்சிக் கண் பார்வை