பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம்

1. அப்பரும் சம்பந்தரும்

தமிழகத்திலே பல்லவரென்ற வகுப்பார் புகுந்து நிலைபெறுவதற்கு முன் கி. பி. மூன்றம் நூற்றண்டின் இறுதியிலே களப்பிரர் என்ற மரபினர் பாண்டி நாட்டிற் புகுந்து அந்நாட்டின்அரசியலேக் கைப் பற்றிக்.ெ காண்டார்களென்பதும், தமிழ்மொழிக்கும் த மி ழ ர் ச ம ய த் தி ற் கு ம் இ ை யூ று விளைத் தார்களென்பதும், மதுரையில் நிகழ்ந்த கடைச்சங்கம் அழிந்த செய்தியாலும் மூர்த்தி நாயனர் வரலாற்ருலும் நன்கு விளங்கும். சமண சமயத்தினரான இக்களப் பிரரால் பாண்டி நாட்டில் விளைந்த இன்னல்கள் பல. இத்தகைய களப்பிரரது கொடுங்கோலாட்சியையகற்றி மீண்டும் பாண்டியரது பேரரசைத் தோற்றுவித்த பெருந்த கை கடுங்கோன் என்னும் பெயருடைய பாண் டியனவான். இச்செய்தி வேள்விக் குடிச் செப்பேடு களாலும் சின்னமனுசர்ச் செப்பேடுகளாலும் நன்கு தெளியப்படும்.

தமிழரொடு தொடர்பில்லாத அயல்வேந்தராகிய பல்லவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியாகிய தொண் டைநாட்டைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநக ராகக் கொண்டு ஆட்சிபுரிய த் தொடங்கியது கி.பி. நான் காம் நூற்ருண்டின் பின்னரேயாகும் பல்லவர்கள் கி. பி. நான் காம் நூற் றண்டிலேயே தமிழகத்திற் புகுந்து ஆளத் தொடங்கினர்களெனினும் அவர்களது ஆட்சி கி. பி. ஆரும் நூற்ருண்டு வரை தொண்டை நா டளவிலேயே நடைபெறுவதாயிற்று. முதல் மகேந்திரவர்மன் காலத்திலேதான் பல்லவராட்சி சோழநாட்டிலும் பரவுவதாயிற்று. கி. பி. ஏழாம்