பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

பன்னிரு திருமுறை வரலாறு


லிங்கத் திருவுருவத்தை எழுந்தருளுவித்த செய்தியை யும் அச்சுலோகங்களிற் குறிப்பிட்டுள்ளான். இச் செய்திகளே நுணுகி நோக்குங்கால் இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலே தான் திருச்சிராப்பள்ளிக் குன்றில் இப்பொழுதுள்ள சிவாலயம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் அதற்குமுன் இவ் வேந்தன் சமண சமயத்தை மேற்கொண்டொழுகிய காலத்தில் இக்குன்றின் கண்ணே இப்பொழுள்ள திருக் கோயில் இருந்திலதென்பதும் நன்கு புலனும் என்பர் , '

சமணர்களாற் கருங்கல்வினுேடு பிணித்துக்கடலில் தள்ளப்பெற்ற திருநாவுக்கரச சுவாமிகள், திருவைந்: தெழுத்தினே ஓதி இறைவன் திருவருளால் அக் கருங் கல்லே தெப்பமாகப் பெற்றுக் கடலேக்கடந்து திருப் பாதிரிப்புலியூரருகே கரையேறினர். தமக்குத் தோன் ருத் துணையாயுதவிய பெருமான் எழுந்தருளிய திருக் கோயிலே யடைந்து 'ஈன் ருளுமாய் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிஞர். சமணர்கள் செய்த வஞ்சனே களையெல்லாங் கடந்து திருநாவுக் கரசர் உய்ந்து கரையேற உதவிய இறைவனது திரு வருட்டி றத்தை நன்குணர்ந்த பல்லவ மன்னன், தன் னுடைய பழவினைகளெல்லாம் அற்ருெழியத் திருநாவுக் கரசரைப் பணிந்து சைவனுயினன். பாடலிபுத்திரத்தி லிருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளேயும் ஒருசேர இடித்து அவற்றின் கற்களைக்கொண்டுவந்து திருவதி கையில் குணபர ஈச்சுரம் என்ற பெயருடைய திருக் கோயிலேக் கட்டினன் என்பது வரலாறு.

புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினேப் பாசம்பறிய அல்லலொழிந் தங்கெய்தி ஆண்ட அரசினேப்பணிந்து வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாளடைந்தான்."

3. செந்தமிழ் 45-ம் தொகுதி, பக்கம் 78.

1. பெரியபுராணம், திருநாவுக்கரசர், செய்யுள் 145,