பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகண்ட சோழன் 2i

பற்றிய இம் மன்னர் பிரான் அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப் படும். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக அமைத்த சிவபத்தன் என்று அன்பிற் செப்பேடுகள் கூறுவது ஈண்டு அறியத் தக்கது.

இனி, ஆதித்தன் புதல்வன் முதற்பராந்தக சோழன் என்பான், தில்லேச் சிற்றம்பலத்தைப்பொன் வேய்ந்தான் என்று ஆனேமங்கலச் செப்பேடுகளும் . திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உண ர் த் து கின்றன. கண்டராதித்தர் கிருவிசைப்பாவும் இச் செய்தியை உறுதிப்படுத்துகின்றது. எனவே முதற் பராந்தக சோழனது ஆட்சிக் காலத்திலும் தில்லைச் சிற்றம்பலம் பொன் வேயப்பட்டது என்று தெரிகிறது.

முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44-ஆம் ஆண்டாகிய கி. பி. 1114-ல் அவன் தங்கை குந்தவையென்பாள் தில்லேக்கோயிலைப் பொன் வேய்ந்தனளென்று அக்கோயிற் கல்வெட்டொன்று அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரமசோழன் என்பான் கி. பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன் வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அவன் படைத்தலேவணுகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லேயிற் பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று 3. முதற்பராந்தகன் கல்வெட்டுகள் கொங்கு நாட்டிற் காணப்படுதலாலும் அவன் அதனேக் கைப்பற்றியதாகக் கூறிக்கொள்ளாமையாலும் அந் நாடு அவன் தந்தை முதலாம் ஆதித்தகுல் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்பது &#6টো তেসে n.

4. Ep. fnd. VoL. XV. No. 5, Verse 18. 5. ibid, Vol. XXII, No. 34, Verse 17. 6. S. i. i. Vol. Iłł, No. 205, Verse 53. 7. Ep. Ind. Vol. V, No. 13 c. 8. S. I. I. Vol. V, No. 458.