பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 373

சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்ந்தாரென்பது பெரிய புராணத்தையும் வரலாற்றுச் சான்றுகளேயும் ஒப்பு நோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.

கி. பி. 642-ல் வாதாவி நகரத்தைக் கைப்பற்றிய பரஞ்சோதியார், பல்லவமன்னன் வேண்டுகோட் கிணங்கிச் சேனத் தலைவர் பதவியிலிருந்து விலகிச் செங்காட்டங்குடியினையடைந்து மனையறம் நிகழ்த்துங் கால் அவர்க்குச் சீராளன் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தது கி. பி. 644-ஆம் ஆண்டிலெனக் கொள்ள லாம். அவனுக்கு மூன்ரும் வயது நிகழ்ந்த கி. பி. 647ஆம் ஆண்டினேயடுத்துத்திருஞானசம்பந்தர் திருச்செங் காட்டங்குடியடைந்து சிறுத்தொண்ட நாயனரால் உபசரிக்கப்பெற்றரெனக் கருதுதல் பொருத்தமுடைய த கு ம். உபநயனஞ்செய்யப்பெற்றுச் சீகாழிப்பதியி லிருந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரைத் திருநாவுக் கரசர் சந்தித்தபொழுது பிள் அளயார்க்கு எட்டாம் வயது நிகழ்ந்ததென்பது முன்பு விளக்கப்பட்டது. அதன்பின் சம்பந்தர் மேற்கொண்ட தலயாத்திரையில் ஒராண்டு கழிந்திருத்தல் கூடும். ஆகவே அவர் திருச்செங்காட் டங்குடியில் சிறுத்தொண்டரால் உபசரிக்கப்பெற்ற காலமாகிய கி. பி. 647-ல் அவருக்கு ஒன்பது வயது நடைபெற்றதெனக் கொள்ளலாம். இங்ங்னம் கொள் ளவே திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்தருளி யது கி. பி. 688-ம் ஆண்டினையடுத்து நிகழ்ந்ததென் பது ஒருவாறு உய்த்துணரப்படும்.

செங்காட்டங்குடியிலிருந்து புறப்பட்ட சம்பந்தர் திருப்புகலூரில் மு. ரு க ைர் திருமடத்தில் சிறுத் தொண்டர் நீலநக்கர் முதலிய அடியார்களுடன் தங்கி யிருந்தபொழுது திருநாவுக்கரசர் திருவாரூரை யிறைஞ் சிப் போற்றி வருபவர், ஞானசம்பந்தரை இரண்டாம் முறையாகச் சந்தித்தாரென்பதும், அவ்விரு பெருமக் களும் திருக்கடவூர், திருவிழிமிழலே முதலிய பல தலங்