பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

பன்னிரு திருமுறை வரலாறு


யாப்பமைதியை ஒட்டியே இயற்றப்படுவன. ஆயினும் இசைத்தமிழ் நூல்களிற் கூறுமாறு பண்ணிர்மையை உளத்துக்கொண்டு வேறுவேறு பாடப்பெறும் சிறப் பியல் புடையனவாகும், ஆகவே இவ்விசைபாடல்கள் இயற்றமிழ் நூல்களிற் கூறப்பட்ட இலக்கண வரை யறையைச் சிறுபான்மை கடந்துவருதலும் உண்டு.

"கொன்றை வேய்ந்த செல்வனடி என்பது: கந்திருவ மார்க்க மாதலின் ஈண்டையிலக்கண மெல் லாம் பெறுதல் சிறுபான்மை எனக்கொள்க’ (தொல் செய் - 149) எனவும், கந்திருவ மார்க்கத்து வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் செந் துறைப் பகுதிக்கே யுரியவாகி வருவனவும், கூத்த நூலுள் வெண்டுறையும் அராகத்திற்கே உரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள்போல வேறு பாடப்பெறும் வழக்கியல என்பது கருத்து. இக்கருத் தானே அவற்றை இப்பொழுதும் இசைப்பா என வேறு பெயர் கொடுத்து வழங்குப* (தொல், செய் - 158) என வும் வரும் பேராசிரியர் உரைப்பகுதிகள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

தொல்காப்பியம் செய்யுளியல் 182-ஆம் சூத்திர வுரையில் இயற்றமிழ் யாப்புவிகற்பமாகிய ஒத்தா ழிசைக் கலியின் உறுப்புக்களாய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்பவற்றுக்கும் இசை நாடகத் தமிழில் வழங்கும் முகநிலை கொ ச்சகம் முரி என்பன வற்றுக்கும் அமைந்த பெயரொற்றுமையினேப் பேரா சிரியர் பின்வருமாறு விளக்குவர்:

2. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணே என்று மேத்தித் தொழுவோம் யாமே ' இது பிசியோடு ஒத்த அளவினதாகிப் பாலேயாழ் என்னும் பண்ணுக்கு இலக்கணப் பாட்டாகி வருதலிற் .ண்ணத்தியாயிற்று என்ருர் இளம்பூரணரும்.