பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பன்னிரு திருமுறை வரலாறு


அவ்வாறே சுந்தரருடன் கயிலே சேர்ந்த சேரமான் பெருமாள் பாடிய திருக் கயிலாய ஞான உலாவைக் கயிலைமால்வரையிற் கேட்டு மகிழ்ந்த மாசாத்தனர் திருப்பிடவூரில் வந்து எ ல் லோர் க் கு ம் புலனுக அவ்வுலாப் பிரபந்தத்தை வெளிப்படுத்தியருளின ரென வும் .ெ ப. ரி ய பு தா ன ம் கூறுகின்றது. இங்கெடுத்துக் காட்டிய குறிப்புக்களால் தேவார ஆசி சியர் காலத்துப் பாடப்பெற்ற திருமுறைப் பகுதிகள் யாவும் அக்காலத்து ஒருசேரத் தொகுக்கப்பட்டு மக்களால் விரும்பிப் பயிலப்பெற்றன என்பது இனிது விளங்குதல் காணலாம். விஜயநந்தி விக்கி, மணுகிய நந்திவர்ம பல்லவமல்லனது 17-ம் ஆட்சியாண்டில் (கி. பி. 750) திருவல்லம் திருக்கோயிலிற் பொறிக்கப் பட்ட கல்வெட்டொன்றில் திருப்பள்ளித்தாமம் பறிப்பார்க்கும் திருப்பதிகம் பாடுவாடுள்ளிட்ட பலபணி செய்வார்க்கும் நெல்லு நானுாற்றுக்காடியும் ” எனக் குறிக்கப்படுதலால் கி. பி. எட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியிலேயே மூவருடைய தேவாரப்பதிகங்கள் திருக்கோயில்களிற் பாடப்பெற்றுவந்த செய்தி நன்கு புலனுகின்றது. தேவார ஆசிரியர்கள் வாழ்ந்த காலத் தையொட்டியே அவர்களாற் பாடப்பெற்ற திருப்பதி கங்களேத் திருக்கோயில்களில் இசையுடன் பாடுதற் குரிய ஒதுவார்களே நியமித்து அவர்களுக்கு வேண்டும் உணவு உடை முதலியவற்றிற்கென நிலமும் பொரு ளும் வழங்கும் வழக்கம் நாட்டில் நிலேபெற்றதென் பதற்கு மேற்காட்டிய நந்திவர்மன் காலத்துத் திருவல் லத்துக் கல்வெட்டே பொருந்திய சான் ருகும். தஞ்சை யைத் தலைநகராகக் கொண்டு சோழர் ஆட்சியை மீண்டும் நிலைபெறச்செய்த விசயாலயன் முதலாக வுள்ள எல்லாச் சோழமன்னர்களும் பிற்காலப் பாண்டி யர்களும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களைக் கற்றளிகளாக்கி அங்கு மூவர் திருவுருவங்களே யெழுந் தருளச் செய்து நாள் வழிபாட்டிற்கும் திருவிழாச் சிறப் பிற்கும் திருக்கோயில்களில் நாடோறும் திருப்பதிகம்