பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப் படும்.

பழந்தக்கராகப் பண்ணுக்கு உரியனவாக இத்திரு முறையில் 47 முதல் 62 வரை பதினறு பதிகங்கள் உள்ளன. இப்பதிகங்களில் அமைந்த கட்டளே விகற் பம் மூன்று எனத் திருமுறைகண்ட புராணம் கூறும். ஆயினும் இவற்றை யாப்பியல்பு ஒன்றே நோக்கி வகைப்படுத்துங்கால் இவை ஆறுவகையாக அமைந் திருத்தல் காணலாம்.

பழந்தக்கராகம்

1. பல்லடைந்த வெண்டலேயிற் பலிகொள்வ தன்றியும்போய்

தானதான தானதான தனதன தானதான

(47 முதல் 51 வரையமைந்த பதிகங்கள் ஒரே நீர்மைய) 2. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்

தனதன ைதனதனணு தானதஞ தனணு

(52-ஆம் பதிகம்)

3. தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழு மறைசேர்

தானதான தனனதான தாகுதன. தனஞ.

(53-ஆம் பதிகம்) 4. பூத்தேர்ந் தாயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தா தாரில்லே யெண்ணுங்கால் தான தானன தானன தானன தான தானன தாளு.ை

என முன்னுள்ள இரண்டடிகளைப்போலவே பின்னிரண் டடிகளும் வந்து முடிவன 54-58-ஆம் பதிகங்கள்.

5. ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை

யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் தனணு தனதனன தான திை

தனதான தான தனகு தன

(59-ஆம் பதிகம்)