பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

பன்னிரு திருமுறை வரலாறு


நின்ற திருத்தாளச்சதி, திரு ஏகபாதம் திரு எழு கூற்றிருக்கை என்னும் இவை மூன்றும் தனித்து எண்ணத்தக்க இயலமைப்புடையன ஆதலானும் இவை தாம் பெறும் பெயர்விகற்பத்தால் வேறு வேறு கட்டளேயின என்பது பெறப்படுதலானும் இவை யொழித்து ஏனேய யாப்புவகை ஆறுமே வியாழக் குறிஞ்சிக்குரிய கட்டளே களாகத் திருமுறைகண்ட புராண ஆசிரியராற் குறிக்கப்பெற்றன.

வியாழக்குறிஞ்சி

கட்டளை 1.

ஆடல் அரவசைத்தான்-அரு-மாமறை தான் விரித்தான்

-கொன்றை சூடிய செஞ்சடையான்-சுடு-காஅ உமர்ந்தபிரான்

ஏடவிழ் மாமலேயாள் -ஒரு-பாக மமர்ந்தடியார் ஏத்த ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.

தான தனதனனு-தன -தா னன தானதனு தான தானன தானதனு தன -தான தனதனணு தானன தானதனு -தன -தான தனதனனு தான தானன தானதனு தனணு நனதா.ை

தான தனதனன, தான தனதான, தானன தான தகு என வரும் இருசிர்க் கட்டளைப் பகுதிகளுள் ஒன்று முன்னும் பின்னும் அமைய அவற்றிடையே தன’ என்னும் அசைச்சீர் நிற்க, முதலடியிறுதியிலும் மூன்ரு மடி இறுதியிலும் தான’ என ஓரசைச்சீர் பிரிந்து நிற்க, இவ்வாறு முதல் மூன்றடிகளும் வந்து, நான்காமடியில் முற்குறித்த இருசிர்க் கட்டளைப் பகுதியுள் ஒன்றும் அதனேயடுத்துத் தனனு தனதான, தானு தனதான 'தானன தான தணு என வரும் இருசிர்க் கட்டளைப் பகுதியுள் ஒன்றும் வந்து முடிவது இதன் கட்டளே யாகும். பாடல்தோறும் நான்காமடியிற் பின்வந்த புகலிப்பதியாமே என்பதுபோலும் இருசீரினையும்