பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 493

நாளுமகிழ்வர் என்ருங்கு வழியெதுகை பெற்றிருத்தல் காணலாம். வழியெதுகை பெற்று வண்ணத்தின் இயல்புடையனவாக அமைந்த இப் பதிகங்களில் "தனனதன’ என்பது, தான தன. தந்ததன, தத்ததன. த ன த் த ன , தனந்தன, தனதன என வருதலும் அமையும். 69 முதல் 80 வரையுள்ள பதிகங்கள் மேற் குறித்த 67, 68-ஆம் பதிகங்களைப் போன்ற யாப்பின வேனும் அவ்விரு பதிகங்களைப் போன்று சீர்கள் தோறும் வழியெதுகை பெருமல் முடுகியலளவாய் வருதலின் திருவிராகம்’ என வழங்கப் பெறுவன வாயின.

யாப்பு 2

மேற்குறித்த கட்டளேயடி போன்று முதல் நான்கு சீரும் அமைய ஐந்தாஞ்சீராகிய ஈற்றுச்சீர் மட்டும் " தானு’ என வருவது சாதாரிப் பண்ணின் இரண்டாம் யாப்பாகும்.

சங்கமரு முன்கைமட மங்கையொரு பாலுடன்வி ரும்பி தந்ததன தந்ததன தந்ததன தா னதன கான என வரும். 81 முதல் 83 வரையுள்ள பதிகங்கள் ஒரே. யாப்பின.

யாப்பு 3

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறை தந்தன. தனதன தனதன தனதன தனதன. என வரும். கந்தன. தனதன ஆதலும், தனதன’ தானன ஆதலும் பொருந்தும். மேல் முதற் றிருமுறை யில் வியாழக் குறிஞ்சிக்குரிய கட்டளைகளுள்,

பணிந்த ைரருவினே பற்றறுத் தருள்செயத்

என நாற்சீரடியாக வந்த திருவிராக யாப்பின்மேல் தனதன என்னும் சீர் சேர்ந்து ஐஞ்சீரடியாக