பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 337

களால் பிற்காலத்தில் நேர்ந்த சில மாற்றங்களும் திரு முறைகண்ட புராணத்தை ஆதரவாகக் கொண்டு எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றன.

தேவாரத் திருப்பதிகங்களே இசையுடன் பாடியும் கேட்டும் மகிழ வேண்டுமானல் அப்பதிகங்களுக்குரிய ப ண் குண கி ய இசையமைப்பினேயும் பாடல்களுக்கு உரிய தாள அமைப்பினேயும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் .ே வ ண் டு ம். செய்யுட்களின் தாள அமைதியினே ப் புலப்படுத்துவன அவற்றில் அமைந்த சீர் நிலைகளே யாகும். சீர்’ எ ன் னு ம் சொற்குத் தாளம் என்பதும் ஒரு பொருள். எனவே திருப்பதிகப் பாடல்களின் சீர் நிலைகளாகிய யாப்பமைதியினேப் பகுத்து உணருங்கால் அதனே நிலைக்களகைக் கொண்டு நிகழும் தாளக் கூறுபாடும் இனிது விளங்கும் என்னும் கருத்தால் திருமுறைகண்ட புராண ஆசிரியர் தே வ | ர த் திருப்பதிகங்களின் பண்முறைபற்றி யமைந்த கட்டளைகளேப் பகுத்துக் கூறியுள்ளார்.

திருமுறைகண்ட புராணத்திற் கூறியவண்னம் தேவாரப் பதிகங்களுக்குரிய பண்களும் கட்டளேகளும் பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் காலத்திற்கு மூன்னிருந்தே வழங்கி வந்துள்ளன. திருமுறைகண்ட புராணம் காலத்தாற் பிற்பட்டதாயினும் அந்நூல் விரித்துரைக்கும் திருமுறைப் பகுப்பும் பண்ணடைவும் கட்டள்ே வகைகளும் திருமுறை வகுத்த நம்பி யாண்டார் நம்பி காலத்திலேயே நிலேபெற்று வழங்கிய தொன்மை வாய்ந்தன என்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆளுடைய பிள்ளையார் பாடிய பூவார்கொன்றை" என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம், தக்கராகப் பண்ணுக்குரிய கட்டளைகளுள் ஒரு கட்டளேக்குரிய

1. கொடிபுரை நுசுப்பிளுள் கொண்ட சீர் தரு வாளோ - கலித்தொகை கடவுள் வாழ்த்து.