பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

பன்னிரு திருமுறை வரலாறு


தமிழ் நூலார். தமிழில் நிறை, குறை, மெலிவு, வலிவு என வழங்குவனவற்றை முறையே பகுத்வம், அற்பத்வம், மந்தரம், தாரம் என வழங்கும் வட நூற் குறியீடுகளோடு ஒத்தனவாகக் கொள்ளலாம். சமன் என்பது சமசுரங்களேக் குறிக்கும். முறை என்பது இசைச் சுரங்கள் பயின்று வரும் முறையைக் குறிக்கும். வரையறையென்பது, ஒருபண் வேருெரு பண் ணுேடு மயங்காமற் காத்தற்குக் கூறும் இலக்கணம். நீர்மை என்பது, சொல்லாற் கூறமுடியாமல் உய்த் துணர்வால் உணர்ந்து கொள்ளத்தக்க இராக பாவம் போன்ற பண் ணிர்மையைக் குறிக்கும். பண்களுக்கு உரியனவாக அடியார்க்கு நல்லார் குறித்த பதிைே சிலக்கணங்களுள் வரையரையும் நீர் மையும் நீங்கலாக எஞ்சிய ஒன்பதும் திருஞான சம்பந்தர் காலத்தில் இசைத் தமிழ்ப் பண்களுக்குரிய இலக்கணங்களாகக் கொள்ளப்பட்டன எனத் தெரிகிறது. இவை ஒன் பதினேயும்,

எண் ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம் எரியிடை மூன்றினர் நான் மறையாளர் மண் ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்

வகுத்தனர் ஏழிசை எட்டிருங்கலை சேர் பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்

பாடிநின் றடிதொழ மதனனே வெகுண்ட கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்

கழுமலம் நினையநம் வினேய கரி சறுமே.

என்னும் திருக்கழுமலத் தி ரு ப் ப தி க த் தி .ே ல பண்ணிடை ஒன்பதும் என ஆளுடையபிள்ளையார் குறிப்பிட்டுள்ளமை காணலாம். மேற்காட்டிய திருப்

பாடலில் ஏழிசை எட்டிருங்கலேசேர்பண்” என்றமை