பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

பன்னிரு திருமுறை வரலாறு


றிறம், திறம், திறத்திறம் என்னும் முத்திறங்களேயும் குறிக்கும் பெயராகும். நூற்று மூன்று பண்கள் என் புழி மேற்குறித்த பண்ணுந் திறமும் ஆகிய எல்லாவற்றை யும் பண்’ என்ற பெயரால் வழங்கும் வழக்கமுண்மை இனிது புலம்ை.

ஓர் இராகத்திற்குரிய ஏழு இசைச் சுரங்களில் ஒவ்வொரு சுரத்தையும் கிழமையாக (சீவகரமாக) க் கொண்டு, மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் பாடுமிடத்து, அவ்விராகம் மூவேழ் துறைகளாக (இருபத்தொரு திறங்களாக), விரிவு பெறும். இவ்வாறு பண்டை இசைத் தமிழ் வல்லோர் ஒரே பண்ணினே இருபத்தொரு துறைகளாக விரிவு படுத்திப் பாடியுள்ளார்கள். புறநானூற்றில் 152-ஆம் பாடல் வல்வில் ஓரியை வன்பரணர் பாடியதாகும். அதன் கண்,

மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி'

என்ற தொடர் அமைந்து ளது. இதற்கு இருபத்தொரு பாடற்றுறையும் முறையாற் பாடி முடித்து’ எனப் பொருள் வரைந்த பழைய உரையாசிரியர், மூவேழ் துறைகளேயும் ன்றது, வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற்றுறையை ’ என விளக்கமும் எழுதியுள்ளார்.

இங்ங்னம் ஏழு சுரங்கள் நிறைவுபெற்றுள்ள பெரும் பண்களுள் ஒன்றினே மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று தானங்களிலும் அமைத்துப் பாடுங் காலத்து அப்பண்ணனது மூவேழு (இருபத்தொரு) இசைத்துறைகளாக விளங்கித் தோன்றும். இவ்வாறு ஒரு பண்ணின் சாயல் அனேத்தும் தெளிவாகப் புலப் படும் முறையில் அதனே மூன்றுதானங்களிலும் வைத்து