பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

பன்னிரு திருமுறை வரலாறு


மின்றிக் கமதந’ என்னும் உருப்பெற்று நிற்பது. ஹிந் தோளம் என்ற பெயரால் மேலே குறிப்பிட்ட மூன்று இராகங்களிலும் காலத்தால் முற்பட்டது சாரங்கதேவர் கூறும் இந்தோளமே. ஆதலால் சங்கீத ரத்தகைரம் கூறும் ஹிந்தோள ராகத்தையே தேவாரத்தில் வரும் இத்தளப்பண்ணின் உருவமாகக் கொள்ளுதல் வேண்டும். சாரங்கதேவர் ஹிந்தோளத்திற்கு இலக் கணங் கூறுங்கால் காகலி கலித’ எனக் குறித்தாராயி னும், கமபந’ என்னும் உருவம் தமிழ் முன்னேர் வகுத்த நூற்றுமூன்று பண்களுள் வாராமையால் இவ் விடத்தில் இந்தளப் பண்ணுக்குக் கைசிகிநிஷாதம் கொள்வது இன்றியமையாததாயிற்று எனவும், காக லீயந்தரங்களோடு கூடி வருங்கால் தீரசங்கராபரணம் கொள்ளுதற்குரியதெனவும், அங்ங்ணங் கொண்டால் இந்தளப் பண்ணின் உருவம் கிமப நி’ ஆகும் எனவும், வடநாட்டில் வழங்கும் தெலுங்க என்னும் இராகமும், 86-ஆம் மேளத்திற் பிறந்த கம்பீரநாட என்னும் இராகமும் இவ்வுருவினவே யெனவும், விபுலாநந்த அடிகளார் யாழ் நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

தமிழ்ப்பண்ணுகிய இந்தனம் வடுகு என்ற பெய ாாலும் வழங்கப்பெற்றுள்ளது. எனவே தமிழ் நாட்டில் "வடுகு" என்ற பெயரால் வழங்கும் இந்தளமும், வட நாட்டில் தெலுங்க" என்ற பெயரால் வழங்கும் இந் தளமும் ஒன்றேயென்பது நன்கு துணியப்படும். இந் தளப்பதிகங்களை லளிதபஞ்சமியிலும் நாத நாமக் கிரியையிலும் பாடும் வழக்கம் பி. ற் க | ல த் தி ல் ஏற்பட்டதாகும்.

78. காந்தனரபஞ்சமம்

மருதப்பெரும் பண்ணின் வடுகு" என்னுந் திறத் தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 76.என்னும்