பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல்

அருளின் நீர் மைத் திருத்தொண்டினே நன் குனர்ந்த சிவஞான ச் செம்மலராகிய ஆளுடைய பிள்ளேயார், தாம் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதி கங்களில் இறைவனுடைய திருவருட்டிறங்களாகக் குறிக்கத் தக்க வற்றுள் மூன்று கருத்துக்களேச் சிறப் பாகத் தெரிந்தெடுத்து அம்மூன்றினேயும் தாம் பாடிய திருப்பதிகங்கள் தோறும் தவருது விரித்துரைத்தலேக் கடமையாகக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்று முதல் ஏழு வரை யுள்ள திருப்பாடல்கள், அவ்வப் பதிகத்திற்குரிய திருத் தலங்களின் இயற்கை வனப்பினையும் அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன் வானுேர்க்கும் அரியணுய் விளங்கும் அருமையினே யும், தன்னடியார் களுக்கு எளிவந்தருளும் எளிமைத் திறமாகிய பெருமை யினையும், உலகெலாம் படைத்தளித்தழிக்கும் வரம்பி லாற்றலுடமை முதலிய திருவருட் பண்புகளேயும், அவ் வத்தலங்களிலிருந்து இறைவனே வழிபாடு செய்து மகிழும் அடியார்களது திருத்தொண்டின் திறத்தையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளன .

தென்னிலங்கை வேந்தனுய இராவணன், முன் அறியாமையினுற் கயிலாய மலேயினே எடுக்க முயன்று அம்மலேயின் கீழ் அகப்பட்டுத் தலேகளும் தோள்களும் நசுங்கி அங்கிருந்தும் மீளமுடியாது அல்ல லு முப்பவன் தன் தவறுணர்ந்து அதனைப் பொறுத்தருளும்படி இறை வனே வேண்டி இசைப் பாடல்களால் பாடித்துதிக்கச் சிவ பெருமான் அவனுக்கு அருள் புரிந்த ஆக்கப் பாட்டினே அறிவுறுத்துவது எட்டாந் திருப்பாடலாகும். படைத்